பக்கம்:அநுக்கிரகா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

அநுக்கிரகா


டேன்னு சொல்லி அவரை ஏமாத்திடாதீங்க. ஒப்புக்குங்க. ஜனங்களைச் சந்திக்கிற எந்த வாய்ப்பையும் ஒரு அரசியல்வாதி இழந்துவிடக் கூடாது. அது கல்யாண்மோ , கருமாதியோ, காதணி விழாவோ, மஞ்சக் குளியோ எதுவானாலும் போய் முன்னால் நின்னுடணும்."

'சரி, தலைவரே! நீங்க சொல்றதை ஒப்புக்கறேன். வயசானவளா இருந்தாலாவது 'மணமக்களுக்கு ஆசீர்வாதம்'னு வாழ்த்திட்டு உட்காரலாம். என்னை மாதிரி ஒரு சின்னப் பொண்ணு இன்னொரு சின்னப் பொண்ணோட கல்யாணத்திலே என்ன பண்ண முடியும்?"

"என்ன பண்ண முடியாது? எல்லாம் பண்ண முடியும். சரின்னு சொல்லுங்க, அவன் போய் மத்த ஏற்பாடுகளைக் கவனிக்கட்டும்."

பொன்னுரங்கத்தின் வற்புறுத்தல் பொறுக்க முடியாமல் அவள் சம்மதித்தாள். திருமணத்துக்கு அழைக்க வந்தவன் மகிழ்ச்சியோடு புறப்பட்டுப் போனான். அவன் தலை மறைந்ததும் அவள் பொன்னுரங்கத்தைக் கேட்டாள்:

"தலைமை வகிச்சுத் திருமணத்தைத் நடத்திக் கொடுக்கிறதுன்னா நான் என்ன செய்யணும்?"

'ஒண்ணும் பிரமாதமில்லே. ரெண்டு. மாலைங்களை எடுத்து மணமக்கள் கையிலே கொடுத்து மாலை மாத்திக்கச் சொல்லணும். அப்பாலே தாலியைத் தருவாங்க. அதைப் பலர் முன்னிலையிலே நீங்க தாம்பாளத்திலே வச்சு நீட்டினா மணமகன் எடுத்துக் கட்டுவார். அப்புறம் மணமக்களை வாழ்த்தி நீங்களும் மத்தவங்களும் பேசணும்! அது ரெண்டு மூணு மணிக்கூறு நீளும்."

"ரெண்டு மூணு மணி நேரமா? அவ்வளவு நேரம் பேச என்ன இருக்கு? மணமக்களை வாழ்த்திட்டு உட்கார வேண்டியது தானே?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/70&oldid=1257428" இலிருந்து மீள்விக்கப்பட்டது