பக்கம்:அநுக்கிரகா.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

அநுக்கிரகா

 யிலேதான்," என்று ஆண்கள் அவளிடம் வந்து கையைப் பிசைந்து அசடு வழிந்தார்கள்; பதறினார்கள்.

பெண்களோ பயப்படாமல் தயங்காமல் அவள் கைகளிலும் அட்சதையைக் கொடுத்து அவளை முகூர்த்த வேளையில் தாலி கட்டும் போது முறையாக வாழ்த்தும்படி செய்து விட்டார்கள். 'தாலியைத்தான் இங்கேயே திரை மறைவில் சாஸ்திரோக்தமாகக் கட்டி விட்டார்களே, இனிமேல் மேடையிலே தான் எதை மணமக்கள் கையில் கொடுப்பது?' என்ற தயக்கத்தோடும் சந்தேகத்தோடும் அங்கிருந்த பழுத்த சுமங்கலியான ஒரு மூதாட்டியைத் தனியே கூப்பிட்டு விசாரித்தாள் அநுக்கிரகா. அந்தம்மாள் சிரித்துக் கொண்டே, "கவலைப்படாதீங்க. அதுக்குன்னே தனியாக் கவரிங்லே இன்னொரு தாலி வாங்கி வச்சிருக்கோம். மாப்பிள்ளைக்குக் கட்டிவிடுகிற வேலை கூட இல்லே. செயின்லேயே தாவியை இணைச்சு ரெடியா இருக்கு," என்றாள்.

பொன்மணம், கவரிங் கல்யாணம் என்று ஒரே மேடையிலே பின்னும் முன்னுமாக இரண்டு நடப்பது வேடிக்கையாக இருந்தது. அவள் அங்கே இரண்டு மூன்று மணி நேரம் தங்க வேண்டியிருந்தது. அந்த மணமேடை வாழ்த்துரையில் தான் 'இளஞ்சோழன்' என்கிற ம.மு.க. கவிஞர் ஒருவர் மணமக்களை அவள் தலைமையில், வாழ்த்திப் பேசும் போது, "அடுத்த தேர்தலில் அநுக்கிரகா அண்ணியார் தான் நமது தொகுதியில் சட்டமன்றத்துக்குப் போட்டியிட வேண்டும். தொகுதியைச் சேர்ந்த கட்சிக் கண்மணிகள் வீட்டுத் திருமணத்துக்குக்கூட வர இயலாதவர்களை இனி நாம் நம் தொகுதிக்குள் நுழையவே விடக்கூடாது. அண்ணியாரைப் பாருங்கள். அழகுக்கு அழகு! அறிவுக்கு அறிவு! ஆக்ஸ்ஃபோர்டில் ஆங்கிலம் படித்த அண்ணியார் இன்று நம் பட்டி தொட்டி மக்களிடம் கூடப் பரிவுடன் பழகுகிறார் என்றால் அதுதானே பண்பாடு," என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/72&oldid=1257567" இலிருந்து மீள்விக்கப்பட்டது