பக்கம்:அநுக்கிரகா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

அநுக்கிரகா

செய்து சிரமப்படுத்தினான். அவனது வாழ்த்துமடல் முழுவதும் அரை கிராம் அரிசியில் வேகவைத்த பொங்கலுக்குள் ஆறு டன் முந்திரிப் பருப்பும், கிஸ்மிஸும் கொட்டிய மாதிரி அதிக அளவு உருவக உவமைகள் திணிக்கப் பட்டிருந்தன. அளவு கடந்த உவமை உருவக ஈரத்தில் வார்த்தைகள், அவற்றின் மதிப்பு, அர்த்தம் எல்லாமே அழுகி உருக்குலைந்து போயிருந்தன. ம.மு.க, மேடைகளில் பெரும்பாலோர் அப்படித்தான் பேசினார்கள். ஏடுகளிலும் அதே பாணியில் தான் எழுதினார்கள்.

ஆஸ்தானப் புலவர் கடும்பனூர் இடும்பனூர் எவ்வளவோ முயன்று கற்பித்தும் அநுக்கிரகாவுக்கு மட்டும் அடைமொழிகளையும் உவமை உருவகங்களையும் ஓவராகத் தாளித்துக் கொட்டும் அந்த நடை கைகூடி வரவில்லை, பிடிக்கவும் இல்லை.

உருவக உவமைகளும், சொல் அடுக்கு வார்த்தை அலங்காரங்களும் இல்லாவிட்டால் மக்கள் முன்னேற்றக் கட்சியில் ரொம்பப் பேச்சாளர்களும் எழுதுபவர்களும் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போய் விடுவார்களோ என்றுகூட அவளுக்குப் பயமாக இருந்தது. சாதாரணமாகச் சுற்றி வளைக்காமல் எதையும் அவளுக்குச் சொல்ல வரவில்லை.

'இப்போது மணமக்களைப் பெரியவர்கள் வாழ்த்திப் பேசுவார்கள்.' என்பதைக் கூட "பட்டுடுத்திப் பரிமள கந்தங்கள் பூசிய புன்னகையும் பொன்னகையுமாய்ச் சிட்டுப் போல் இங்கே அமர்ந்திருக்கும் சிங்கார மணமக்களைப் பட்டறிவுமிக்க மூத்தோர் முதியோரும்——பெரியோர் சான்றோரும் வாயார வாழ்த்தி வனப்புறப் பேசி அறிவுரைகள் வழங்கிச் சொற்பொழிவாற்றிச் சிறப்பிப்பார்கள்," என்றே நீட்டி முழக்கினார்கள்.

அடைமொழிகளின் அதிகக் கனத்தால் அவை சார்ந்து நிற்கும் வார்த்தைகளின் முதுகு முறிந்து போகிற மொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/74&oldid=1257571" இலிருந்து மீள்விக்கப்பட்டது