பக்கம்:அநுக்கிரகா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

75

"தெரியுங்க..."

"அப்ப ஒண்ணு செய். இந்த விஷயத்துக்குப் பதிலே சொல்லாமே கனிவண்ணனைப் பத்தி அவனோட லஞ்ச லாவண்ய——ஒழுக்கக் கேடுகளை ஒரு புடி புடி."

"சரிங்க...அது நல்ல ஐடியாதான்."

"அதோட இன்னொரு விசயம்."

“என்னங்க ...."

"இன்னும் கொஞ்ச நாளைக்கு அதாவது எலெக்ஷன் முடிஞ்சி அநு ஜெயிக்கிறவரை அந்த இளஞ்சோழனை அநு பேசற மேடைப் பக்கமே அண்ட விடாதே. கொஞ்சம் ஓரம் கட்டி ஒதுக்கிவை."

"நாம வலுவிலே அப்பிடிப் பண்ணினா இவ்லாத குத்தத்தை ஒத்துக்கிற மாதிரி ஆயிடாதுங்களா? வெறும் வாயை மெல்றவங்களுக்கு அவல் கிடைச்சாப்ல ஆயிடுமே?"

“ஆகாது! 'நான் சொல்றபடி செய்.. மறக்கறதுக்கு டயம் கொடுத்தா ஜனங்க எதையும் மறந்துடுவாங்க. அதுக்கு டயம் கொடு."

முத்தையா சொன்னபடியே செய்யப் பொன்னுரங்கம் ஒப்புக்கொண்டான். அடுத்த வாரச் சுடுசரத்திலேயே கனிவண்ணனுக்கு ஆறு 'சின்ன வீடுகள்' இருப்பதாகவும் அவன் லஞ்சம் வாங்கியே பலகோடி சேர்த்திருப்பதாக மக்கள் பேசுகிறார்கள்' என்றும் நெருப்பு நடைக் கட்டுரை ஒன்று வந்தது. அவசியமானால் தொடரும் என்றும் கடைசியில் போட்டிருந்தது. அது பயனளித்தது. மறவன் குரலில் அநுக்கிரகாவைப் பற்றிய கட்டுரையின் சுருதி உடனே மாறியது. இறங்கித் தணிந்தது.

'குட்டி சமஸ்தானத்து இளவரசியால் குடிசைவாசிகளுக்கு ஆபத்து! அநுக்கிரகா இங்கு எம்.எல்.ஏ ஆனால் ஆவாரம்பட்டு ஹவுஸைச் சுற்றியுள்ள குடிசைகள் உடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/77&oldid=1257581" இலிருந்து மீள்விக்கப்பட்டது