பக்கம்:அநுக்கிரகா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அநுக்கிரகா

முத்தையா இவ்வளவில் அவனோடு பேசுவதை நிறுத்திக்கொண்டு, "அநு! இங்கே வா. பொன்னுரங்கம் வந்திருக்கான், பாரு," என்று டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்த மகளைக் கூப்பிட்டார். .

உடனே விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு பெண்ணை விடை கொடுத்து அனுப்பிவிட்டுத் தந்தையருகே வந்தாள் அநுக்ரகா. அவள் டென்னிஸ் உடையுடன் வந்தது முத்தையாவுக்கு உள்ளூர அவ்வளவாக ரசிக்கவில்லை. செல்லமாகக் கண்டித்தார்.

"உள்ளே போய் ஸாரி மாத்திக்கிட்டு வாம்மா! இன்னம் லண்டன்லே இருக்கிறதாகவே நினைப்பாம்மா. உனக்கு? இப்படி டென்னிஸ் உடையிலேயும், ஸ்விம்மிங் சூட்லேயும் நின்னுட்டிருந்தால் இங்கே பாலிட்டிக்ஸ்ல புகுந்து ஒண்ணும் பண்ணிக்க முடியாது. ஃபிலிம் லயன்ல வேணா இந்த மாதிரி டிரெஸ்லே ஷைன் பண்ணலாம்,

"ஐயாம் ஸாரி டாட்!" புடவையை மாற்றிக்கொண்டு வர டென்னிஸ் மட்டையுடன் உள்ளே போனாள் அநுக்ரகா,.

திரும்ப வந்து அவள் தன்னிடமும் எங்கே ஆங்கிலத்திலேயே பேசிவிடப் போகிறாளோ என்று முன்னெச்சரிக்கையான ஒருவகைப் பயம் பொன்னுரங்கத்தைப் பிடித்துக் கொண்டது. வாயைத் திறந்தாலே ஆங்கிலத்தைத் தவிர வேறெதுவும் வராத இந்த வெள்ளைக்கார நாசூக்குடன் இவள் எப்படிக் குப்பனும் சுப்பனும் நிறைந்த ம.மு. சு. (மக்கள் முன்னேற்றக் கட்சி)வில் இடம் பிடித்து முன்னேறப் போகிறாள் என்று தயக்கமாகக் கூட இருந்தது அவனுக்கு. முத்தையாவோ அடித்துச் சொன்னார் :

"என்ன செலவானாலும் பரவாயில்லேப்பா! எனக்கு இது ஒரு சவால்னே வச்சுக்க நம்ப அநுவைப் பாலிடிக்ஸ்ல மேலே கொண்டாந்தே ஆகணும்! இங்கிலாந்திலே படிச்ச-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/8&oldid=1267803" இலிருந்து மீள்விக்கப்பட்டது