பக்கம்:அநுக்கிரகா.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

அநுக்கிரகா

வேதனையாயிருந்தாலும் பொறுமையைக் கடைப்பிடித்தார்.

அன்று மாலையே நல்ல செய்தி கிடைத்தது. கட்சி மேலிடம் கூடி அந்த முறை அந்தத் தொகுதியில் அநுக்கிரகாவையே சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு நிறுத்துவது என்று முடிவு செய்து விட்டதாம். அதனால் ஏமாற்றமடைந்த கனிவண்ணன் கட்சியிலிருந்து விலகி அதே தொகுதியில் சுயேச்சையாக நிற்கப் போகிற தகவலும் மாலைச் செய்தித் தாள்களில் வெளியாகியிருந்தன. களிவண்ணனைத் தவிர வேறு வேறு தரப்புக்களிலிருந்து இன்னும் எத்தனைபேர் போட்டியிடுவார்கள் என்று தெரியாமலிருந்தது. அதிகப்போட்டி இருக்கும் என்றார்கள்.


12

வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாளும் முடிந்த பின் பார்த்தால் அந்தத் தொகுதியில் அநுக்கிரகாவையும் சேர்த்து மொத்தம் நாற்பத்திரண்டு பேர் வேட்பாளராக அபேட்சை மனு கொடுத்திருந்தார்கள். போட்டியிலிருந்து வாபஸ் பெற இன்னும் சில நாட்கள் அவகாசம் தரப்பட்டிருந்தது.

அநுக்கிரகாவும் கனிவண்ணனும் தவிர, நாற்பது பேர் அத்தொகுதியின் பல்வேறு சாதிகள், இனங்கள், மதங்களின் சார்பில் நிறுத்தப்பட்டவர்களாகத் தோன்றினர்..

அதில் முக்கால்வாசிப் பேர் "முக்கிய வேட்பாளராகிய அநுக்கிரகாவோ, கனிவண்ணனோ கூப்பிட்டுப் பேசி ஏதாவது பணம் கொடுத்தால் வாங்கிக்கொண்டு அப்படிப் பணம் தந்தவர்களுக்கு ஆதரவாக ஓர் அறிக்கையை விட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/82&oldid=1259161" இலிருந்து மீள்விக்கப்பட்டது