பக்கம்:அநுக்கிரகா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

அநுக்கிரகா

காண்டெஸ்ட் ஆக இருந்தால்தான் நம்ம பாப்பாவுக்கு வெற்றி வாய்ப்பு நிச்சயம், நாப்பத்திரண்டு அபேட்சகருங்களில் நாற்பது பேர் தலைக்கு ஆயிரம் ரெண்டாயிரம்னு ஒட்டைப் 'பிரிச்சுப் புட்டாங்கன்னா, என்ன ஆகும்னே சொல்ல முடியாது.

"இதே மாதிரி கனிவண்ணனும் நினைச்சுப் பயப் படணுமே? அவன் எந்தத் தைரியத்திலே மெதப்பா இருக்கான்?"

இப்படிப் பலபேரை நிறுத்தி ஓட்டுங்களைத் தாறு மாறாப் பிரிச்சு, அதுலே தானே ஜெயிச்சுடலாம்கிற மெதப்பாக் கூட இருக்கும்.

"அப்போ டம்மி கேன்டிடேட்ஸுங்கள்ளாமே கனி வண்ணன் சொல்லி நிற்க வச்சதுன்னா சொல்றே பொன்னுரங்கம்?

“அவன் அப்பிடி எல்லாம் செய்யக்கூடிய ஆளுதாங்க."

"சரி, இப்போ என்ன செய்யணும்கிறே?

"பணத்தைக் கொடுத்துப் 'போய் ஒழியுங்கடா'ன்னா வாபஸ் வாங்கிடுவாங்க."

"இன்னும் எத்தினி நாள் இருக்கு வாபஸ் வாங்க?"

"ரெண்டு நாள் தாங்க இருக்கு! அதுக்குள்ளார முடிக்கணும்."

அடுத்த இரு தினங்களில் ஐந்நூறு முதல் ஐம்பதாயிரம் வரை செலவழித்து, முப்பத்தெட்டுப் பேரை வாபஸ் வாங்க வைத்தார்கள். குறைந்தபட்சத் தொகை ஐந்நூறு அதிக பட்சத் தொகை ஐம்பதாயிரம். நடுப்பட்டவை பல, இந்த வகையில் சுளையாக ஐந்து லட்சம் செலவாகி விட்டது முத்தையாவுக்கு, இரண்டே இரண்டு பேரிடம் மட்டும் முடியவில்லை, ஏராளமாகப் பேராசைப்பட்டுக் கேட்டார்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/84&oldid=1259160" இலிருந்து மீள்விக்கப்பட்டது