பக்கம்:அநுக்கிரகா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா, பார்த்தசாரதி

83

கள்.. என்ன ஆனாலும் பரவாயில்லை என்று துணிந்து அவர் களை நிராகரித்தார் முத்தையா. ஆக, அநுக்கிரகாவை எதிர்த்துக் கனிவண்ணனும், வேறு இருவரும் சேர்த்துப் போட்டியிட்டனர்.

கனிவண்ணன் தான் அப்போதைய எம். எல், ஏ. என்ற முறையில் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள அரும்பாடு பட்டுப் பிரசாரம் செய்தான். மற்றவர்கள் இருவரும் எதுவுமே செய்யவில்லை. உண்மையான கடும் போட்டி என்பது அநுக்கிரகாவுக்கும், கனிவண்ணனுக்கும் நடுவில் தான் இருந்தது. அவர்கள் இருவரும்தான் தீவிரப் பிரசாரத்தில் இறங்கி ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார்கள், இருவருடைய பிரசார முறையிலும் வித்தியாசம் இருந்தது. கனி வண்ணன் தோற்று விடுவோமோ என்ற பீதியோடும் பரபரப்போடும் அநுக்கிரகாவை மேட்டுக்குடி என்றும் ஏழை எளியவர்களின் பிரச்சினைகளே புரியாத மேல்தட்டுவாசி என்றும் தாறுமாறாகப் பேசினான். கொஞ்சம் ஓவராகக் கூட இருந்தது.

அந்தத் தொகுதியிலுள்ள அறுபது குடிசைப் பகுதிகளிலும் "அநுக்கிரகா வந்தால் குடிசைகளையெல்லாம் காலி செய்து ஏழை எளிய மக்களை நடுத் தெருவில் அநாதைகளாக நிறுத்தி விடுவாள்"-என்ற பிரசாரம். முடுக்கி விடப்பட்டது.

ஆனால் அநுக்கிரகாவோ பொன்னுரங்கமோ கனிவண்ணனைத் தாக்கி . எதுவும் பேசாமல் 'தாங்கள் வென்றால் அந்தத் தொகுதி மக்களுக்கு என்னென்ன - நன்மைகளைச் செய்ய முடியும்' என்பதை மட்டுமே விவரித்தார்கள். “இதுவரை உங்களை இந்த வசதிக் குறைவான குடிசைகளிலேயே வைத்துவிட்டு உங்கள் பிரதிநிதிகளாகித் தாங்கள் மட்டும் மாட மாளிகைகளைக் கட்டிக்கொண்டு வாழ்பவர்களைப் போல் அல்லாமல் குடிசைகள் உள்ள பகுதிகளில் சுகாதார வசதி குடிநீர் வசதி சாலைகளோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/85&oldid=1259162" இலிருந்து மீள்விக்கப்பட்டது