பக்கம்:அநுக்கிரகா.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

அநுக்கிரகா

கூடிய அடுக்குமாடி வீடுகளைக் கட்டிக்கொண்டு அவற்றை அங்கு முன்பு இருந்த மக்களுக்கே தவணை முறையில் பணம் கட்டி உரிமையாக்கிக் கொள்ளும்படி தரப்போகிறோம். அடுத்த ஐந்தாண்டுக் காலத்தில் அனைத்து ஸ்லம்களும் இப்படி அடுக்கு மாடி வீடுகளாகக் கட்டப்பட்டு உங்களுக்குக் கிடைக்க அநுக்கிரகாவையே தேர்ந்தெடுங்கள்.

பெருவாரியான பெண்கள் நிறைந்த அந்தத் தொகுதியில் இந்தப் பெருவாரியான பெண்கள் பிரசாரம் நன்றாக eஎடுபட்டு மக்கள் மனத்தில் பதிந்தது. கனிவண்ணன் பேரையே கூறாமல், "ஆம், குடிசைகளை அகற்றத்தான் போகிறோம், உங்களைத் தெருவில் நிறுத்துவதற்காக அல்ல, மழைக்கு ஒழுகாத வெய்யிலுக்கு வெப்பம் காயாத அழகிய அடுக்கு மாடி வீடுகளைக் கட்டி, மீண்டும் உங் களுக்கே தருவதற்காகத்தான்- என்ற பாணியில் எதிர் தரப்பினரின் பொய்ப் பிரசாரத்தை அநு சார்பினர் நாசூக்காக மறுத்தார்கள்.

கனிவண்ணன் அதுவரை எம்.எல்.ஏ. ஆக இருந்து அந்தத் தொகுதிக்கு எதுவுமே நன்மை செய்யாததாலும், குடிசைப் பகுதிகளுக்குள் எட்டியே பார்க்காததாலும், ஒரு சாதாரண அச்சாபீஸ் பைண்டராக வாழ்ந்த அவன் இன்று உறுப்பினரானதும் மாடி வீடு கட்டிப் பல லட்சம் சேர்த்து வாழ்கிற டாம்பீகத்தைப் பார்த்தும் அத்தொகுதி மக்களே வெறுப்படைந்திருந்ததாலும் அவனது அடாவடிப் பிரசாரம் எடுபடவில்லை .

தன்னோடு உடன் வரும் நூற்றுக்கணக்கான ம. மு. க, பெண் ஊழியர்களுடன் ஒவ்வொரு குடிசைப் பகுதியாக நடந்தே போய் அவர்கள் குறைகளைக் கேட்டறிந்தாள் அநுக்கிரகா. அத்தனை பெரிய பரம்பரையில் வந்த புகழ் பெற்ற பணக்காரக் குடும்பத்துப் பெண் ஒரு பவிஷம் பாராமல் தங்களைத் தேடி வந்து வோட்டுக் கேட்டது வாக்காளர்களுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/86&oldid=1259165" இலிருந்து மீள்விக்கப்பட்டது