பக்கம்:அநுக்கிரகா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

7

வளாச்சே, சரியாத் தமிழ் பேசவருமோ, வராதோன்னெல்லாம் கவலைப்படாதே. யாராச்சும் புலவருங்களை ஏற்பாடு பண்ணிக் கத்துக் கொடுத்திடலாம். சுளுவா எல்லாம் வந்துடும்ப்பா.

"கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த வார்த்தையும் நிக்காதும்பாங்களே, ஐயா!

"அதெல்லாம் ஹைதர் காலத்துப் பழமொழியப்பா. இப்ப செல்லுபடி ஆகாது. அதுவுக்குக் குறிப்பறிஞ்சு பழகற குணம் அதிகம். இது. இது இப்படி இப்படின்னு ஜாடை காமிச்சாலே புரிஞ்சுக்குவாள். அவளோட முகராசிக்கு அவள் தப்பாத் தமிழ் பேசினாலும்கூட ஜனங்க கைதட்டிக் கொண்டாடப் போறாங்க, பாரு.

"நீங்க சொல்றதெல்லாம் சரிதாங்க. ஆனா... இதுலே ......"

"ஆனாலாவது போனாலாவது? ஜமாய்க்கப் போறாள், பார்த்துக்கிட்டே இரு."

"நீங்க சொல்றதெல்லாம் சரி தாங்க. ஆனா அந்தக் கனிவண்ணன் ரொம்பப் பொல்லாத ஆளாச்சே.

அவன் பொல்லாதவனா இருந்தா அது அவனோட. இன்னம் எண்ணி ஆறே மாசத்திலே, என் மகள் அவனை ஓரங்கட்டி நிறுத்தறாளா இல்லியா பாரு.

முத்தையாவின் கோபத்துக்குக் காரணம் இருப்பது பொன்னுரங்கத்துக்குப் புரிந்தது. பரம்பரைப் பெரிய மனிதரான முத்தையாவை முந்தா நாள் அரசியல்வாதியான கனிவண்ணன் அவமானப்படுத்தி விட்டதுதான்

இந்தக் கோபத்துக்குக் காரணம். கேவலம் ஒரு சின்ன விஷயத்துக்காக அவன் அவரிடம் அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டாம் என்றே பொன்னுரங்கத்துக்குக் கூடத் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/9&oldid=1267808" இலிருந்து மீள்விக்கப்பட்டது