பக்கம்:அநுக்கிரகா.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

அநுக்கிரகா

"போகப் போக விளங்கும். அப்பப் புரிஞ்சுக்குவீங்க. பொதுவிலே ஆஸ் திங்க்ஸ் ஸ்டாண்ட் டுடே, உங்க மகளை எதிர்க்கிறான்னு சொன்னீங்களே, யாரோ கனிவண்ணனோ மணிவண்ணனோ அவனை மாதிரி ஆளுங்களுக்குத்தான் பாலிடிக்ஸ் பே பண்ணும். நமக்கெல்லாம் அது நஷ்டக் கணக்காகவும், லயபிலிட்டியாவும் தான் இருக்கும் மிஸ்டர் முத்தையா."

அப்படியா? லெட் அஸ் வெய்ட் அண்ட் ஸீ!

நண்பர் காப்பி சிற்றுண்டி அருந்தி விடைபெற்றுக் கொண்டு சென்றபின் நெடுநேரமாகியும் முத்தையா அவர் கூறியவற்றைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார். இரவில் கூட, நெடு நேரம் வரை உறக்கம் வராமல் இந்தச் சிந்தனை அவரை பாதித்தது. மறுநாள் விடிந்தால் பொதுத் தேர்தல். பல இடங்களில் சுற்றி அலைந்து விட்டு ஊழியர்களையும் தேர்தல் அலுவலகங்களையும் நேரில் போய்க் கவனித்தபின் அநுக்கிரகா வீடு திரும்புகையில் இரவு இரண்டு மணி. அலைந்து திரிந்து வாடிக் கருகி இருந்தாள், அவருக்கே அனுதாபமாகவும் பரிதாபமாகவும் இருந்தது அவளைப் பார்க்கும் போது. சிட்டுக் குருவியாகவும் பச்சைக் கிளியாகவும் இருந்தவளை இப்படி ஆக்கிய பாவத்துக்குத் தானே பொறுப்பாளி என்று கூட அவருக்குத் தோன்றியது. அவருக்கு அன்றிரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.

சரியாகக் , காலை நான்கு மணிக்கு அநுக்கிரகாவின். அறையில் மறுபடி விளக்கு எரிந்தது. நீராடி உடை மாற்றிக் கொண்டு தயாரானாள் அவள். சமையற்காரனை எழுப்பி அவளுக்கு பிரட் டோஸ்ட்டும், காப்பியும் தயாரிக்கச் . சொன்னார் முத்தையா.

"நீங்க ஏம்பா எழுந்திருந்து சிரமப்பட்றீங்க? நான் பார்த்துக்க மாட்டேனா? என்றாள் அநுக்கிரகா. '"

“தூக்கம் வரலேம்மா ."

கொஞ்சம் கார்ன்ஃப்ளேக் பால் கரைசலும் இரண்டு ஸ்லைஸ் ரொட்டியும் காப்பியும் சாப்பிட்டுவிட்டு அவள் , புறப்பட்ட போது, “ஹாவ் த பெஸ்ட்" என்று வாழ்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/94&oldid=1259185" இலிருந்து மீள்விக்கப்பட்டது