பக்கம்:அநுக்கிரகா.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

97

வெற்றிகள் தான் அதிகக் கஷ்டங்களை உண்டாக்கும் என்பது அந்த வினாடியில் அவருக்குப் புரிய ஆரம்பித்தது. மோசமான ரௌடி ஒருத்தனை எதிர்த்து முதல் தரமான சாது ஒருத்தன் ஜெயிப்பது எத்தனை அபாயகரமான பின் விளைவுகளையெல்லாம் உண்டாக்கும் என்றெண்ணிய போது குலை நடுங்கியது. ஏதோ பண வசதி, ஆள் கட்டு, பொன்னுரங்கம் போன்ற அனுபவக்காரரின் பக்கபலம் எல்லாம் இருப்பதனால் தான் தம்மாலேயே சமாளிக்க முடிகிறதென்று அவருக்குப் பட்டது.

தோட்டத்தில் பட்டாசு வெடிக்கிற சப்தமும் கூடவே கேட்டது. பொன்னுரங்கம் சிரித்தபடியே திரும்பி வந்தான். ஒரு செட் ஆளுங்க கலாட்டா பண்ணணும்னு. தேடி வந்தாங்க. ஆனா, இங்கே நாம் எல்லாம் எதிர்பார்த்துத் தயாராப் பதிலுக்கு 'செட் அப்' பண்ணி வச்சிருந்ததாலே . மிரண்டு ஓடிட்டாங்க,

"அது சரி, பொன்னுரங்கம். வழியெல்லாம் இப்பிடி மோசமாவே இருக்கே, வோட்டு எண்ற இடத்திலேயிருந்து அது பத்திரமா வீடு திரும்பணுமே? அதுக்கு என்ன ஏற்பாடு? எனக்குக் கவலையா இருக்குப்பா."

"ரெண்டு லாரி நெறைய நம்ம ஆட்களும் பாதுகாப்புப் பட்டாளமும் அங்கே இருக்காங்க. வெற்றி அறிவிப்பு வந்ததும் மாலை மரியாதை, பட்டாசு வாண வேடிக்கையோட முன்னே ஒரு லாரி, பின்னே . ஒரு . லாரி சகிதம் திறந்த ஜீப்ல அநு வீட்டுக்கு ஊர்வலமா வரும். ஆரத்தி சுத்திக் காட்டி வரவேற்க ரெடியாகுங்க.

"இந்த மாதிரி டென்ஷன் நிலைமையிலே ஊர்வலம் வாண வேடிக்கை எல்லாம் எதுக்குப்பா? தோத்தவன் வயித்தெரிச்சலை மேலும் கிளறி விடவா?, .

“அதெல்லாம் வேணுங்க. உங்களுக்கு ஒண்ணும் தெரியாது, சும்மா இருங்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/99&oldid=1259198" இலிருந்து மீள்விக்கப்பட்டது