பக்கம்:அந்தமான் கைதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அந்தமான் கைதி

காட்சி 1.

இடம் : அந்தமான் தீவில் கைதிகள் வேலை பார்க்கும் இடம்

காலம் : மாலை

பாத்திரங்கள்: நடராஜன், மற்றொரு கைதி.

[கிழக் கைதி ஒருவன் விறகு உடைத்துக் கொண்டே பாடுகிறான். இசை இன்பத்தில் மயங்கிய மற்றொரு வாலிபக் கைதி கிழவனை நெருங்குகிறான்.]

(கிழக் கைதியின் பாட்டு)

[இராகம்-கரகரப்பிரியா]

(தாளம்-ஆதி)

சிந்தையைக் கவர்ந்திடும் இந்திய நாட்டை இந்த
சென்மத்தில் காண்பேனோ?-எந்தன்
அந்திய காலம் வரை அந்த மான் தீவிலேயே
நொந்துயிர் வீழ்வேனோ? (சிந்தை)

கங்கை காவிரி யமுனை கோதாவரியோ டின்னும்
கணக்கில்லா நதியோடி-எங்கும்
பொங்கும் செழுமையும் களிப்பும் தரும் சென்ம
பூமியைக் காண்பேனோ? (சிந்தை)

வாலிபக் கைதி : ஆஹா என்ன இனிமை! என்னபொருள் நயம்! எங்கே இன்னுமொருமுறை பாடுங்கள் கேட்போம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/10&oldid=1024281" இலிருந்து மீள்விக்கப்பட்டது