பக்கம்:அந்தமான் கைதி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

 பொன் : (லீலா நெருங்குகிறாள்) இதோ போகிறேன். போகிறேன், போய் விட்டேன். (ஓடி விடுகிறார்)

லீலா : (உடனே அறைக் கதவைத் தாளிட்டுக்கொண்டு, படுக்கையில் அயர்ந்து உட்கார்ந்து) அப்பாடி......! சனியன் தொலைந்தது; தப்பினோம் இந்தக் கண்டத்திலிருந்து, யோசனை வெற்றிதான். இதுதான் என் கற்பைக் காப்பாற்றிக்கொள்ள நல்ல வழி! இன்னும் என்னென்ன அதிசயங்கள் நடைபெற வேண்டுமோ? என்னென்ன வேஷம் போட வேண்டிய திருக்குமோ? இருக்கட்டும் பார்ப்போம். (படுக்கையில் சாய்கிறாள்)



காட்சி 25.


இடம்: வீதி

பாத்திரங்கள்: ஜம்பு, கணபதி ஐயர்.

ஜம்பு : ஓய், ஓய், கணபதி ஐயர் ஏது அதிகாலையிலே?...

கணபதி : ஓ! ராத்திரி ஆத்திலே இல்லையோ?

ஜம்பு : ஏய்யா ஏக ஆர்ப்பாட்டமோ? (சிரிப்பு)

கணபதி : ஆர்ப்பாட்டமா! ராத்திரி முழுக்க ஒரே களேபாரமாப் போச்சின்னா!

ஜம்பு : சகஜந்தானே, நாலாந்தாரமா வந்துருக்கா, எஜமானுடைய அந்தஸ்து எப்படிப்பட்ட தென்று புதுப் பெண்ணுக்குத் தெரியவாண்டாமா? இனிமேல் கொஞ்ச நாளைக்கு அதிகாரமெல்லாம் பலமாய்த்தானிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/101&oldid=1073456" இலிருந்து மீள்விக்கப்பட்டது