பக்கம்:அந்தமான் கைதி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

புறப்பட்டுவிட்டேன், கவலைப்படாதே! அடுத்த கப்பலில் பதிவு செய்யப்படும் முதல் சீட்டு என்னுடையதுதான்.

(விரைந்து செல்லுகிறான்)



காட்சி 28.


இடம் : திவான்பகதூர் மாளிகை.

காலம் : மாலை.

பாத்திரங்கள் : திவான்பகதூர், முனியாண்டி, ஜம்பு
[பொன்னம்பலம் வருத்தமாக உட்கார்ந்திருக்கிறார். முனியாண்டி வருகிறான்.]

முனி: நமஸ்காரமுங்க! என்ன இப்படி ஒரு மாதிரியா இருக்குறீங்க?

பொன் : (வெறுப்போடு முறைத்துவிட்டு மறுபுறம் திரும்பிக்கொள்ளுகிறார்.)

முனி : ஏங்க? என்னைப் பார்க்கப் புடிக்கிலிங்களா? ஆமாமா ஒங்க காரியந்தான் முடிஞ்சுபோச்சே இன்னெமே இவனைப் பார்த்து என்ன பிரயோசனம்? உம், நீங்க என்னைப் பாக்காட்டிப் பரவாயில்லே, பேசினபடி பணத்தைக் கொடுத்திடுங்க!

பொன் : (கோபமாக) பணமாவது பிணமாவது, ஏதுடா பணம்! அயோக்கியப் பயலே!

முனி : என்னங்க இப்படிச் சொல்றீங்க! எப்படியாவது கல்யாணத்தே முடிச்சுப்புட்டா ரூவா ஐநூறு தாரென்னு நீங்கதானே சொன்னீங்க!

பொன்: போதும், போதும்; நான் கல்யாணம் முடித்ததும் கட்டையிலே போனதும்; இதுவரை உன் பேச்சைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/107&oldid=1073460" இலிருந்து மீள்விக்கப்பட்டது