பக்கம்:அந்தமான் கைதி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

 முனி: சரி சரி அப்படியா சமாச்சாரம், ஊம். நகத்துங்க. ஓகோ அதானே நானும் என்னடா சோழியங் குடுமி சும்மா ஆடாதேன்னு பார்த்தேன். அப்ப சரிங்க, மறந்திடாதிங்க நான் வர்ரேங்க, சில்லரை...

ஜம்பு: ஆகட்டும் காரியம் முடியட்டும்.

முனி : மகமாயி!

(போகிறான்).

காட்சி 29.

இடம் : நடராஜன் வீடு.

காலம் : மாலை

பாத்திரங்கள்: நடராஜன், காமாட்சி.
[காமாட்சி ஒருபலகையில் உட்கார்ந்திருக்கிறாள். நடராஜன் ஆத்திரமும், துக்க ஆவேசமும் தூண்டப்பட்டவனாய் கோபத்தோடு]

நட: ஆம். நீதான் பெற்றாய்! வளர்த்தாய்! அதற்காக இப்படியா செய்யவேண்டும்? அம்மா! அம்மா! நீ மட்டுமா உலகத்தில் அதிசயமாக மக்களைப் பெற்று வளர்த்தாய்? உன்னைப்போல் எத்தனையோ கோடிக்கணக்கான தாய்மார்கள் மக்களைப் பெற்று வளர்க்கவில்லையா? அவர்களில் யாராவது இப்படி உன்னைப் போல் தன் மக்களே உயிரோடு பலிகொடுக்க விரும்புவார்களா? ஐயோ! இதைவிட நீ லீலாவை ஆற்றிலோ குளத்திலோ தள்ளியிருந்தால் கூடப் பரவாயில்லையே! அதைவிடக் கொடுமையல்லவா செய்திருக்கிறாய்!

காமா: இப்ப என்னடா உலகத்திலே இல்லாத கொடுமையை நான் செய்து விட்டேன்? லீலா ஒருத்தி தான் அதிசயமா நாலாந்தாரமாகக் கட்டிக்கிட்டா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/109&oldid=1073461" இலிருந்து மீள்விக்கப்பட்டது