பக்கம்:அந்தமான் கைதி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109

இன்னம் எத்தனையோ லட்சம் பேர் இந்தமாதிரி ரெண்டாந்தாரம், மூணாந்தாரமுன்னு கல்யாணம் செய்துக்காமேயா இருக்காங்க! எல்லாம் அதது விதியப்போலத்தான் நடக்குன்னுட்டுப் போவாமே...

நட : விதி விதி யாருக்கு விதி: சோம்பேறிகளும், கையாலாகாதவர்களும் அல்லவா தன்னால் ஆகாத காரியங்களுக்கெல்லாம் விதி விதியென்று சொல்லி, யானை, தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதைப் போல் தங்களைத் தாங்களே கெடுத்துக் கொள்வார்கள். அந்தோ விதியின் பெயரைச் சொல்லி இந்நாட்டில், எத்தனை கோடிப் பேர்களைக் கெடுத்திருக்கிறார்கள்; எத்தனை கோடிப் பேர் தன்னைத்தானே கெடுத்துக்கொண்டார்கள்; அம்மா கொஞ்சம் நன்றாக யோசித்துப் பார். லீலாவை இன்று ஒரு கிழவனுக்கு மனைவியாக்கி அவள் வாழ்க்கையைப் பாழாக்கியது நீயா அல்லது விதியா? நீ விதியென்று தான் சொல்வாய்; அப்படியானால் நாளையே லீலாவுக்கு மறுமணம் செய்ய ஏற்பாடு செய்கிறேன்; அப்போது அந்த விதி என்ன செய்கிறது? அந்த விதியினால் இதைத் தடுக்க முடிகிறதா என்பதைப்பார். அதன் பிறகாவது விதியின் பெயரால் நீ எவ்வளவு பெரிய அக்ரமத்தைச் செய்து விட்டாய் என்பது தெரியும்.

காமா : இப்படி யெல்லாம் வருமுன்னு நாங்கண்டேன்? எல்லாம் உன் நன்மையை உத்தேசித்துத்தான் செய்தேன்.

நட: மறுபடியும் எனக்காகச் செய்தேனென்று சொல்லாதே; உன் அண்ணன் உறவு விட்டுப்போகக்கூடாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/110&oldid=1072423" இலிருந்து மீள்விக்கப்பட்டது