பக்கம்:அந்தமான் கைதி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

என்பதற்காகக் கிளியை வளர்த்துப் பூனைக்குக் கொடுத்ததைப்போல் கொடுத்துவிட்டு, என் நன்மைக்காகச் செய்தேனென்று வேறா சொல்லுகிறாய்?

காமா : அதுனாலே இப்ப என்னடா கெட்டுப்போச்சு! அவள் ராஜாத்தி மாதிரி இருக்கா. அவளுக்கென்ன குறைச்சல்?

நட: ராஜாத்திமாதிரி இருப்பது அது இல்லை...... நீ தான் இப்போது அப்படி இருக்கிறாய்...... தங்கச் செயின், பட்டுப் புடவை, என்ன அலங்காரம்! என்ன ஒய்யாரம் சே! இந்த அற்பப் பொருள்களுக்காகவா ஒரு பெண்ணைப் பலி கொடுக்க வேண்டும்? உன்னால், உன் பண ஆசையால், உன் அறியாமையால் இன்று லீலா தன் வாழ்க்கையில் சுகங்கள் எல்லாவற்றையும் இழந்து நரக வேதனைப் படுகிறாள் தெரியுமா?

காமா : அவள் சுகத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை; நீ....

நட : சுகமா! அடடாடா, இந்த சுகம் உன் வயிற்றில் பிறவாதிருந்தால் கிடைத்திருக்குமா?......... விஷமே உருவாகிய உன் வயிற்றில் நாங்கள் பிறந்தோமே!

காமா : (முகத்தில் துணியை வைத்துக் கசக்கிக்கொண்டு). ஹும் இதெல்லாம் என்னெப் புடிச்சப் போராத காலம். நல்லதுக்குச் செய்யப்போனா என்னமோப் பெரிய கொலை பண்ணிட்டாப்போல பேசுறே! எம் புத்திக்கி இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

நட : கொலை செய்திருந்தால் கூடப் பரவாயில்லையே, அம்மா! அதைவிடப் பெரிய கொடுமை யல்லவா செய்து விட்டாய். ஐயோ! பத்து மாதம் சுமந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/111&oldid=1072430" இலிருந்து மீள்விக்கப்பட்டது