பக்கம்:அந்தமான் கைதி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

படுகிறீர்களா? அப்படியானால் எனக்காக அநியாயமான முடிவடைந்த தங்கள் உண்மைக் காதலிக்காக என் மறைவுக்குப் பின்னாவது நீங்கள் வருந்தியே தீரவேண்டும். என் அண்ணா என்றைக்கு வந்து சேருவாரோ? இந்தப் பாவியின் இருண்ட வாழ்வு என்று முடிவுறுமோ? அதன் பிறகாவது தாங்களே தங்கள் தவறை உணர்ந்து அதற்காக வருந்தித்தான் தீரவேண்டும். (நீண்ட பெருமூச்சோடு) ஹும் இதுதான் தாங்கள் என் மீது கொண்ட உண்மைக் காதலின் பயன்...

(லீலா பாட்டு)

மாமதியும் எழிலாய்
வான் மீதெழுந்ததுவே முழு
(மா)
தாமரை குளிர் தென்றலும்
எனை தகிப்பதேனறியேன்
இனி சகிக்கும் வகைதெரியேன்
(மா)
நாதமில்லா வீணைபோல்
நான் இன்றானேன்
காதலன் வாராரோ வருவாரோ தோணேன்
கெதியிலா அபலையாய் :சோதனை செய்யலாகுமா
இது தூய தன்மையதோ
என்ன மாயமோ சூதோ
(மா)

(பொன்னம்பலம்பிள்ளை ஆத்திரத்தோடு வெளியில் வந்து மெள்ளக் கனைக்கிறார், லீலா திடுக்கிட்டுப் படத்தை மறைக்கிறாள்.)

பொன் : ஏய்! அது என்ன? எங்கே இப்படிக் கொடு பார்ப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/114&oldid=1072701" இலிருந்து மீள்விக்கப்பட்டது