பக்கம்:அந்தமான் கைதி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

 லீலா : ஒன்றுமில்லை, உம்..... வெறும் காகிதம்....

பொன் : காகிதமா! ஏதோ படத்தைப் போலல்லவா..... தெரிகிறது.

லீலா : ஆமாம், அது எங்கண்ணாவுடைய படம்.

பொன் : என்ன, உன் அண்ணாவுடைய படமா? எங்கே, இப்படிக் கொடு பார்ப்போம்.

லீலா : ஊஹும்? உங்களிடத்தில் கொடுத்தால் நீங்கள் கிழித்து விடுவீர்கள்.

பொன் : அதெல்லாம் அப்படி ஒன்றுங் கிழித்துவிட மாட்டேன்; சும்மா கொடு.

லீலா : இல்லை, என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்; நான் கொடுக்கவே மாட்டேன்.

பொன் : என்ன! நான் கேட்கிறேன்; கொடுக்கவே முடியாதா ! எனக்கு எல்லாம் தெரியும். நீ உன் அண்ணனையே காதலிப்பவளென்று மரியாதையாய்க் கொடு.

லீலா : போதும் நிறுத்தும். வித்தியாசமாய் ஒன்றும் பேச வேண்டாம்.

பொன் : என்ன டீ! போனால் போகிறதென்று பார்த்தால் அளவுக்கு மீறுகிறாய். இப்பொழுது கொடுக்க முடியுமா? முடியாதா?

லீலா : முடியாது.

பொன் : முடியாது, ஊம்.சரி. கொடுக்கவேண்டாம்; அந்தக் கள்ளப் புருஷன் யாரென்றாவது சொல்.

லீலா : அதுவும் முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/115&oldid=1072723" இலிருந்து மீள்விக்கப்பட்டது