பக்கம்:அந்தமான் கைதி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115

 பொன் : (கோபச் சிரிப்பு) தேவடியாச் சிரிக்கி! இப்பொழுது தெரிகிறதடி நீ பேயாடிய நாடகமெல்லாம், ஹும் கொடு இப்படி. (படத்தைப் பிடுங்க எத்தனிக்கிறார் முடியாமல் தள்ளாடிக் கீழே விழுகிறார்; கோபம் அதிகரிக்கிறது.) அவ்வளவு திமிரா உனக்கு? மயிலே மயிலே என்றால் இறகு போடுமா, இருக்கட்டும் (பக்கத்தில் மாட்டியிருந்த சவுக்கை யெடுத்து அடிக்கிறார், லீலா-அண்ணா! அண்ணா! என்று கத்துகிறாள். தொடர்ந்து அடிக்கிறார்; அடி தாங்காமல் சோர்ந்து, ஐயோ! 'ஐயோ! அண்ணா! அண்ணா' என்று அடியற்ற மரம்போல் சாய்கிறாள்.)

பொன் : (ஒரு கையில் மீசையை முறுக்கிக்கொண்டே). அண்ணா! அண்ணா! எங்கேயடி அண்ணன்? அண்ணன் நீ கூப்பிட்ட உடனே கடலைத் தாண்டி அப்படியே வந்து குதித்து விடுவானே? ஏண்டி! (மறுபடியும் சவுக்கை ஓங்கி அடிக்கப்போகிறார். அப்போது அங்கு வந்த நடராசன் தாவி திவான் பகதூரின் கையிலிருக்கும் சவுக்கைப் பிடுங்கிக் கொண்டு, திவான் பகதூரை ஆத்திரம் தீர அடிக்கிறான். திவான் பகதூர், ஐயோ! ஐயோ! அடே அடிக்காதேடா என்று கத்துகிறார்.)

லீலா : ஆ! அண்ணா (என்று ஓடி அண்ணனைக் கட்டிக் கொள்ளுகிறாள்.)

பொன் : (அடியைத் துடைத்துக்கொண்டே எழுந்து) அடே அயோக்கியப் பயலே! என் பெண்டாட்டியை நான் அடித்தால் நீ யாரடாவன் கேட்பதற்கு? இங்கே யாரைக் கேட்டுடா உள்ளே வந்தாய்?

நட : உன் பெண்டாட்டி! உன் பெண்டாட்டியா? புருஷன் அழகைப்பார்! கிழட்டு அயோக்கியப் பயலே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/116&oldid=1073464" இலிருந்து மீள்விக்கப்பட்டது