பக்கம்:அந்தமான் கைதி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

(மறுபடியும் ஒரு போடு போடுகிறான், கிழவன் கீழே விழுந்தபடியே)

பொன்: அடே யாரடா அங்கே? முனியா! ராமா! ஜம்பு! எல்லோரும் வாங்கடா இங்கே! (ஆட்கள் ஓடிவருகிறார்கள்) இவனைப் பிடித்து வெளியில் தள்ளுங்கள். (வேலைக்காரர்கள் நடராஜனைப் பிடித்து இழுத்துக் கொண்டு போகிறார்கள், லீலா, அண்ணா! அண்ணா! என்று கத்திக்கொண்டு தொடருகிறாள். திவான் பகதூர் அவள் தலைமுடியைப்பற்றி இழுத்துக் கீழே தள்ளி)

யாரங்கே? (வேலைக்காரி லக்ஷிமி வருகிறாள்) இவளே இழுத்துக் கொண்டு போ! (அழைத்துப் போகிறாள்) அயோக்கியப் பயல், என்னிடமா இந்த ஜம்பமெல்லாம் செல்லும்? இருக்கட்டும்; பூண்டோடு தொலைத்து விடுகிறேன்.


காட்சி 31.


இடம் : திவான் பகதூர்

காலம் : மாலை மாளிகையின் தோட்டம்

பாத்திரங்கள்: ஜம்பு, லீலா.

[லீலா ஒரு பெஞ்சின் மீது உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருக்கிறாள். ஜம்பு திருடனைப் போல் அடிமேல் அடிவைத்து வந்து பக்கத்தில் நின்று மெல்லக் கனைக்கிறான். லீலா திடுக்கிட்டுக் கண்ணைத் துடைத்துக் கொள்ளுகிறாள்.]

ஜம்பு : லீலா ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்? வீட்டில் ஏதாவது.....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/117&oldid=1073463" இலிருந்து மீள்விக்கப்பட்டது