பக்கம்:அந்தமான் கைதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


யல்லவா? உம், அதிருக்கட்டும்; உன்னோடு தனித்துப் பேசவேண்டுமென்ற ஆசை, இன்றைக்குத்தான் சந்தர்ப்பம் கிடைத்தது. உன்னைப் பார்த்தால் உயர்ந்த குடும்பத்தில் உதித்த பிள்ளையைப்போல் தெரிகிறது. என் தலைவிதிதான் பதினேழு ஆண்டுகளாக இந்த அந்தமான் தீவில் படாத பாடெல்லாம் படுகிறேன். நீ இந்தச் சிறுவயதில் இவ்வளவு கொடிய தண்டனையடையும்படி என்ன குற்றத்தைச் செய்துவிட்டாய்?

வாலிபக் கைதி: ஐயா, இன்ப வேளையில் இந்தத் துர்ப்பாக்கியனின் வரலாற்றைக் கேட்டுக் கொஞ்சம் நிம்மதியாய் இருக்கும் தங்கள் மனத்தையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம். பிறகு ஒரு நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம். இன்றைக்கு நம் நாட்டு அறிஞர்கள் யாராவது ஒருவரைப் பற்றிய கதையைச் சொல்லுங்கள் கேட்போம்.

கிழக் கைதி : தம்பி! ஒரு அளவுக்கு மேற்படும்போது இன்பம், துன்பம் இரண்டும் ஒன்றுதான். என்னைப் பொருத்தமட்டும் நிம்மதி குறைவென்பதொன்றுமில்லை. உன்னைப் பற்றிய வரலாற்றை அறிய என் மனம் அதிகமாக விரும்புகிறது.

வாலிபக் கைதி : ஐயா! தங்கள் விருப்பத்தைத் தடுக்க நான் விரும்பவில்லை. வாருங்கள் இப்படி உட்கார்ந்து பேசலாம்.

[இருவரும் ஒரு பாறைமீது உட்காருகிருர்கள்.]

வாலிபக் கைதி : என் சொந்த ஊர் தூத்துக்குடி. என் தந்தை ஒரு பெரிய கப்பல் வியாபாரியாகவும் செல்வந்தராகவும் இருந்தார். எங்கள் ஊரில் என் தந்தைக்கு அபரிமிதமான செல்வாக்கும் மதிப்பும் இருந்தன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/12&oldid=1024296" இலிருந்து மீள்விக்கப்பட்டது