பக்கம்:அந்தமான் கைதி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

லீலா ஜம்புவின் அணைப்பில் இருப்பதைக் கண்டு தப்பபிப்ராயத்தோடு பற்களைக் கடித்துக்கொண்டு திரும்பி விடுகிறான். இதே சமயம் ஜம்புவும் பாலுவைப் பார்த்து விடுகிறான், லீலாவுக்குத் தண்ணீரைத் தெளித்து விசிறிக் கொண்டே) ஐயோ! இதென்ன கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதைபோல் ஆகி விட்டதே! இந்த மகா உத்தமிக்கு நான் செய்த தீமை யெல்லாம் போதாதென்று கடைசியில் நான் செய்த நன்மையுமல்லவா தீமையாகிவிட்டது. மயங்கி வீழ்ந்த லீலாவைத் தொட்டுத் தூக்கியதைக்கண்ட பாலு, என்னைத் தவறாகவல்லவா நினைத்துக்கொண்டு போகிறான். இனி அவனை எப்படி இந்த உண்மையை நம்பச் செய்வேன்? (கண்ணீர் விடுகிறான், லீலா மெள்ளப் புரண்டு கண்ணைத் திறக்கிறாள்) லீலா, லீலா, இதோ பார்! நான் இனி உன் சகோதரன். சத்தியமாக நான் இனி உன் சகோதரன். லீலா! நீ என்னை மன்னிக்க மாட்டாயா? என்னை மன்னிக்க மாட்டாயா?

(கைகளைப் பிடித்துக் கொண்டு கதறுகிறான், லீலாவும் கண்ணீர் விடுகிறாள்.)

லீலா : உன்னைக் கடவுள் மன்னிப்பார். எழுந்திரு.

ஜம்பு : சரி, லீலா! கெட்ட குடியே கெடும், பட்ட காலிலே படும் என்பது போல் இப்போதும் நமக்கு ஒரு ஆபத்து. மயங்கி வீழ்ந்த உன்னைத் தூக்கும்போது சப்தம் கேட்டு இப்பக்கம் போன பாலு எட்டிப் பார்த்துவிட்டு நம்மீது தப்பபிப்ராயம் கொண்டு போகிறான். நான் சீக்கிரம் போய் உண்மையை விளக்கி அவன் சந்தேகங்களைத் தெளிவித்து முன்பு உங்களைக் கெடுத்துப் பிரித்த இந்தச் சண்டாளனே ஒன்றுபடுத்தியும் வைத்துவிடுகிறேன். நீ போ பங்களாவுக்கு நான் இதோ வருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/123&oldid=1073466" இலிருந்து மீள்விக்கப்பட்டது