பக்கம்:அந்தமான் கைதி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127

 நட : பாலு வெட்கமில்லையா உனக்கு! நான் அந்த நிலைக்கு வரவில்லை யென்று சொல்ல உன் நாவு கூசவில்லை? அவ்வளவு நெஞ்சுத் துணிவில்லாத நீ ஏன் என் தங்கையைக் காதலித்தாய்? பெற்றோருக்கும் உலகத்துக்கும் பயப்படும் இந்தப் புத்தி உனக்கு ஏன் அப்பொழுதே இல்லாமல் போயிற்று? காதலிக்கத் துணிந்த உனக்கு அதன் விளைவுகளை ஏற்கத் துணிவில்லையா? பாலு! காதல் எதையும் பொருட்படுத்தா தென்பதை நீ யறியாயா? காதலுக்காக எத்தனையோ பேர் எவ்வளவோ பெரிய தியாகங்களை யெல்லாம் செய்திருக்கிறார்களே! அப்படியிருக்கப் பிறர் இழிவாகப் பேசுவார்களே என்பதற்காக உன் காதலியை இழந்துவிடப் போகிறாயா?

பாலு : இழந்துவிடப் போவதென்ன? (பெருமூச்சிட்டு) இழந்துதான் ஆயிற்றே. இனியொரு தரமா அதை விரும்பவேண்டும்?

நட : அப்படியானால் நான் சொல்வதை நீ கேட்க மாட்டாயா?

பாலு : கேட்கக் கூடியதாயில்லை. மன்னிக்கவேண்டும். என் உள்ளம் முன்பே புண்பட்டிருக்கிறது. நீங்கள் மறுபடியும் மறுபடியும் ஒரு விபசாரிக்காகப் பரிந்து பேசுவது......

நட : (நெருப்பை மிதித்தவனைப் போல் துடித்து) ஆஹா, என்ன சொன்னாய் (ஓங்கி பாலுவை அறைகிறான், ஆத்திரத்தில் வெறி பிடித்தவன் போல்) விபச்சாரி விபச்சாரி!! யார் என் தங்கையா விபச் சாரி அடே பேடி, உன்னையும் ஒரு மனிதன் என்று நினைத்துத் தன் விலை மதிப்பற்ற காதலை விரையமாக்கினாளே, என் தங்கை. துரோகி உன்னைப்போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/128&oldid=1072938" இலிருந்து மீள்விக்கப்பட்டது