பக்கம்:அந்தமான் கைதி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

உணர்ச்சியற்ற சோம்பேறிகள் இருக்கும்வரை இந்த நாடு எப்படி முன்னேறப்போகிறது; ஒரு பேதைப் பெண்ணின் உள்ளத்தில் காதலை விதைத்து வளர்த்துப் பயிராக்கி முடிவில் அதை அடியோடு பாழ் படுத்திவிட்டாயே! ச்சீய், ஆண் மகனா நீ? இனியாவது உன்னைப் போன்ற பேடிகள் இப்படிச் செய்யாமல் இருக்கும் பொருட்டாவது உன் மூடத்தனத்துக்கு, உன் அற்பத்தனத்துக்கு, உன் கோழைத் தனத்துக்கு, இல்லை, இந்நாட்டுக் கற்பரசிகளின் விடுதலைக்காகவாவது, என் அன்பில் என் ரத்தத்தில் ஊறிய என் தங்கையையும் என்னையும் பலி கொடுக்கிறேன். பிறகாவது உன் போன்ற கோழைகள் வாழட்டும்.

(நடராஜன் ஓடுகிறான்.)

பாலு : (எதிர்பாராத விதமாய் வீழ்ந்த அடியிலும் பேச்சிலும் ஸ்தம்பித்துக் கன்னத்தைத் தடவியபடி, தனக்குள்) லீலா விபச்சாரி இல்லையா! லீலா விபச்சாரி இல்லையா! லீலா விபச்சாரி யில்லையா? நான் பார்த்தேனே! அவன் அந்த ஜம்பு அவளைத் தன் இரு கைகளாலும் அணைத்துத் தூக்கி.......

(மற்றொரு புறத்திலிருந்து ஜம்பு ஓடி வருகிறான்.)

ஜம்பு : பாலு! பாலு! லீலா விபச்சாரியில்லை. லீலா விபச்சாரியில்லை. நீ நினைப்பது தவறு. அவள் மகா உத்தமி!

பாலு : யார், ஜம்புவா லீலாவின் புதிய காதலன? அடே அயோக்கியப் பயல்களா! யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? (பாலு திடீரென்று ஜம்புவின் மீது பாய்ந்து அவன் கழுத்தைப் பிடித்து அழுத்திக் கொல்ல முயற்சிக்கிறான்.)

ஜம்பு : (கம்மிய குரலில்) பாலு சத்தியமாகச் சொல்லுகிறேன். உன் காதலி லீலா விபச்சாரியல்ல; மகா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/129&oldid=1072953" இலிருந்து மீள்விக்கப்பட்டது