பக்கம்:அந்தமான் கைதி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

என்ன கொலை செய்தவன் பாலசுந்தரமா? எங்கே எங்கே அதைக் கொடுங்கள்! (பத்திரிகையை அவர்கள் கையிலிருந்து வெடுக்கென்று பறித்து மளமளவென்று படித்துக் கீழே போட்டுவிட்டு) ஐயய்யோ! இதென்ன அநியாயம்? அவன் நிரபராதியாயிற்றே! பாலசுந்தரம் நிரபராதியாயிற்றே! பாலு.. பாலு...

(ஓடுகிறான்)

நபர் 1 : இதென்ன பைத்தியம்..... இது புது மாதிரியாக இருக்கிறதே!

நபர் 2 : லேட்டஸ்டு மாடல் போலிருக்கிறது.

(இருவரும் சிரிக்கிறார்கள்)



காட்சி 36.


இடம்: நீதிமன்றம்.

காலம்: காலை

[வக்கீல்கள், ஜூரர்கள் யாவரும் அமர்ந்திருக்கிறார்கள். பாலு கைதிக்கூண்டில் நிற்கிறான். லீலா, ஜம்பு, போலீஸ் இன்ஸ்பெக்டர், ஜவான்கள் முதலியவரும் இருக்கிறார்கள். உரியகாலத்தில் நீதிபதி வந்து உட்கார்ந்து தீர்ப்பை வாசிக்கிறார். யாவரும் அமைதியாக இருக்கின்றார்கள்.]

நீதிபதி:- மிகவும் சாதாரணமாகக் கருதப்படும் இந்த வழக்கு என் வரையில் மிகவும் சிக்கல் நிறைந்ததென்றே நினைக்கிறேன். கொலை செய்யப்பட்ட திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளையோ பிரபலஸ்தர். குற்றவாளி என்று கருதப்படும் பாலசுந்தரமோ நேர்மையும் நல்லொழுக்கமும் உள்ள இளைஞர். என் அனுபவத்தில் இத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/135&oldid=1073470" இலிருந்து மீள்விக்கப்பட்டது