பக்கம்:அந்தமான் கைதி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137

பான்மையுடன் கல்யாணத்தை முடித்துவிட்டார்கள். மணம் முடிந்த பின் என் தங்கை அவர் இஷ்டத்திற்கு இணங்காததினால் அப் பெண்ணை வேறு சில காரணங்களைச் சொல்லி இம்சிக்கத் தொடங்கவே, இம்சை பொறுக்கமுடியாத நிலையில் என் தங்கை எனக்கு எழுதிய ஒரு கடிதத்தின் மூலம் நான் உண்மையறிந்து இந்தியா வந்து சேர்ந்தேன். இது நிற்க. இக்கொடுமை நடப்பதற்குமுன்னே இப்போது தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பாலசுந்தரத்திற்கும் என் தங்கைக்கும் பரஸ்பரம் காதல் உண்டு என்பது எனக்குத் தெரியும். ஆகையால் சீர்திருத்தத்தில் ஆர்வம் கொண்ட நான், பாலசுந்தரத்திடம் சென்று இப்போதாவது என் தங்கையை மறுமணம் செய்துகொள் என்று வேண்டினேன். அவன் அதையும் மறுத்துவிடவே, என் தங்கையை வேறுவகையில் காப்பாற்றச் சக்தியற்றவனாய் இருந்தேன்.

இரங்கூனிலிருந்து வந்த அன்றே லீலாவைச் சந்திக்கத் திவான்பகதூர் வீட்டுக்குச் சென்றேன். அங்கு லீலாவின் சரீரமெல்லாம் ரத்தம் பீரிட்டு ஒழுக ஒழுகத் திவான்பகதூர் சவுக்கினால் அடித்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். தடுத்த என்னை, அவர் வேலையாட்களைக் கொண்டு வெளியில் தள்ளச் செய்தார்; பொறுமையை இழந்தேன்.

எப்படியும் அப்பெண்ணை அக்கொடியோனிடமிகுந்து காப்பாற்ற வேண்டுமென என் மனம் துடித்தது. வேறு வழியில்லை. மரணத்தைத் தவிர வேறு வழியில் அவளுக்கு விடுதலை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை; அவள் இறந்தால் அதற்குப் பொறுப்பாளி யார்? பொன்னம்பலம் தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/138&oldid=1073040" இலிருந்து மீள்விக்கப்பட்டது