பக்கம்:அந்தமான் கைதி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

ஆகையால் அவரையும் கொன்று விட்டு நானும் இறந்து விடுவதாகத் தீர்மானித்தேன்.

பிறகு அன்று இரவே திவான்பகதூர் வீட்டுக்குப் போய், பொறுக்கமுடியாத ஆத்திரத்தோடும், ஆவேசத்தோடும், என் தங்கையையும், இன்னும் எத்தனையோ ஆயிரக்கணக்கான பெண்களையும் கெடுத்த திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளையைப் பிச்சுவாவினால் குத்தினேன். இதற்குள் என் தங்கையும் விழித்துக்கொள்ள அதே சமயம் எனக்குப் பின்னால் யாரோ ஓடிவரும் சப்தமும் கேட்கவே என்ன செய்வதென்று புரியாத நான் பீதியுடன் பிச்சுவாவை அங்கேயே போட்டுவிட்டு ஓடி விட்டேன். பிறகு இங்கு நடந்ததொன்றும் எனக்குத் தெரியாது.

ஓடிய நான் ஊர் ஊராக அலைந்து திரிந்தேன். பசி, தாகம், இன்பம். துன்பம், வெய்யில். மழை எதைப் பற்றியும் கவலையின்றி நடைப் பிணமாய் அலைந்து கொண்டிருந்தேன். எதிர்பாராத விதமாய் நேற்று மாலை பத்திரிகை மூலம் இவ்வழக்கு சம்பந்தமாய்ப் பாலசுந்தரம் தண்டனையடையப் போகிற விஷயம் அறிந்து நிரபராதியாகிய பாலுவைக் காப்பாற்ற 70 மைல்களை ஓட்டமும், நடையுமாகக் கடந்து எப்படியோ இங்குவந்து சேர்ந்தேன். உண்மை இதுதான். ஆகையால் சமூகத்தில் தீர விசாரித்து உண்மைக் குற்றவாளியாகிய என்னைத் தண்டித்து நிரபராதியாகிய பாலசுந்தரத்தை விடுதலை செய்ய வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

நீதி : மிஸ்டர் நடராஜன் சொல்லுவதெல்லாம் உண்மையாயிருப்பின் நிரபராதி ஒருவனைத் தண்டித்த அபவாதத்திலிருந்து ஆண்டவன் என்னைக் காப்பாற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/139&oldid=1073043" இலிருந்து மீள்விக்கப்பட்டது