பக்கம்:அந்தமான் கைதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14



நடராஜன்: இன்று மாலை டவுன்ஹாலில் ஒரு பொதுக்கூட்டம், எங்கள் கழகச் சார்பில் ஏற்பாடு செய்திருக்கிறோம். அதற்காகத்தான் இன்று சீக்கிரம் புறப்பட்டுவிட்டேன்.

(காமாட்சி வருகிறாள்)

லீலா : அண்ணா! அதோ அம்மா வருகிறார்கள்.

காமாட்சி : ஆமாம், இதுதான் பொளப்பாபோச்சு பின் என்னதான் செய்வே, வேளாவேளைக்குக் கடனோ ஒடனோபட்டுச் சோறு போட நானொருத்தி இருக்கும் போது ஒனக்கு என்ன கவலை? நீ பாட்டுக்கு ஊருலே உள்ள காலிப்பசங்களை யெல்லாம் சேத்துக்கிட்டு கம்முனாட்டிக்கெல்லாங் கல்யாணம் பண்ணனும்; அவிசாரிகளெயெங்லாங் குடுத்தனக்காரி யாக்கனும் இன்னு பேசிக்கிட்டுத் திரியரே! ஏதுடா கைக் கொசந்தப் பொண்ணு ஒண்னு ஆளாயி வீட்டுலே இருக்கெ! அதுக்குக் காலாகாலத்திலே ஒரு கல்யாணத்தைப் பண்ணனுமே; எப்படி எப்படியோ இருந்த குடும்பம் இப்படிப் போயிடிச்சே நம்ம தானே இதெல்லாங் கொண்டு செலுத்தணுங்குற கவலையே மனசிலே வச்சி, ஒரு வேலைவெட்டியேப் பாப்போமின்னு இல்லாமே, காலமெல்லா இப்படி சீர்திருத்தம் மீட்டிங்கு இன்னு சுத்திக்கிட்டு இருந்தா எப்பதான் ஒனக்குக் குடும்பக் கவலை தெரியிறது? நீ யென்ன சின்னப் பிள்ளையா?...உம் (பெரு மூச்சிட்டு) என்னமோப்பா நீ செய்றது எனக்கொண்ணும் புடிச்சுக்கெல்லே. ஒங்குடும்பத்தே நீயே பார்த்துக்க. நான் எங்கேயாவது போயிடுறேன். எனக்கென்ன? கால் வயித்துக் கஞ்சிதானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/15&oldid=1024310" இலிருந்து மீள்விக்கப்பட்டது