பக்கம்:அந்தமான் கைதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காட்சி 3.

இடம்: திவான் பகதூர் மாளிகை.

காலம்: காலை.

பாத்திரங்கள்: திவான் பகதூர், ஜம்பு.

[ஜம்பு, தபால்களை உடைத்து ஒவ்வொரு படமாக எடுத்துக் காட்டுகிறான். திவான்பகதூர் பார்வையிடுகிறார்]

ஜம்பு: ஜானகி, வயது 17. இதைப் பார்த்தீர்களா?

பொன்: எங்கே! சேச்சே. இதென்ன மூஞ்சுறு மாதிரியிருக்கு.

ஜம்பு: இதைப் பாருங்கள்!

பொன்: அடே அப்பா! இதென்ன வைக்கோல் போர் போல் இளைத்துப்போய் இருக்கிறது! இதை யார் கட்டிக்கொண்டு மாரடிப்பது? சேச்சே, ஒன்றாவது உருப்படியா யில்லையே.

ஜம்பு: இந்தப் படம் கொஞ்சம் சுமாரா......

பொன்: வயசென்ன? பதிமூனா! சேச்சே. மொகறையைப்பாரு, கிழட்டுக்களை அப்படியே தாண்டவமாடுதே.

(சமையல் கணபதி ஐயர் வருகிறார்)

கணபதி: மணி 13 ஆச்சு, சாப்பாட்டை முடிச்சுண்டு சாவகாசமாய்ப் பார்க்கலாமே தபாலே.

பொன்: அட இரைய்யா, சாப்பாடுதானா பெரிசு...

ஜம்பு: ஒய் கணபதி ஐயர், உமக்கு சமய சந்தர்ப்பம் ஒன்றுமே தெரிவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/18&oldid=1024362" இலிருந்து மீள்விக்கப்பட்டது