பக்கம்:அந்தமான் கைதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

கணபதி: மன்னிக்கணும். நான் ஏதாவது ஒன்று செலைக்ட்டு ஆயிருக்கும்னு நெனச்சேன்.

பொன்: என்னத்தை செலைக்ட்டு ஆகிறது. எல்லாம்தான் தாடகையும் சூர்ப்பநகையுமா இருக்கே.

ஜம்பு: எனக்கு அப்பொழுதே தெரியும். நாலாந்தாரம் என்று விளம்பரம் செய்தால் இப்படிக் கழுசடை விண்ணப்பங்கள்தான் வருமென்று.

பொன்: இந்த யோசனையை நீ ஏன் முன்பே சொல்லக்கூடாது?

ஜம்பு: சொன்னால்...நீங்க ஏதாவது......

பொன்: ஆமாம், நீங்க; நீங்க என்ன? விஷயத்தை விவரமாகச் சொன்னால் சரிதான் என்று சொல்லிவிட்டுப்போகிறேன்...... உம் அது போகட்டும்; விளம்பரத்தில் எப்படிப் போட்டிருக்கிறது? அதைப் படி பார்ப்போம்.

(ஜம்பு பத்திரிகையை எடுத்துப் படிக்கிறான்)


மணமகள் தேவை!

சுமார் 20 லக்ஷ ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்தும், செல்வாக்கும், அந்தஸ்தும் உள்ள ஒரு பிரபுவுக்கு நாலாந்தாரமாக ஒரு மணமகள் தேவை. பெண் அழகும், சொத்துக்களைக் காப்பாற்றும் ஆற்றலும், கல்வியறிவும் உள்ளவளாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட விலாசத்திற்குப் புகைப்படத்துடன் எழுதவும்.


பொன்: நாலாந்தாரம் என்பதைக் குறிப்பிடா விட்டால், பிறகு ஏதாவது குற்றம் வருமே என்றுதான் பார்த்தேன்.

(மற்றொரு படத்தைப் பார்த்து)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/19&oldid=1024392" இலிருந்து மீள்விக்கப்பட்டது