பக்கம்:அந்தமான் கைதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

அடடே இவள் சினிமாவிலே ஆக்டுப்பண்ணி இருக்காளாம்...பாரப்பா! பெரிய ஸ்டார் போலே இருக்கு. சுலோசனாவாம்.

ஜம்பு: சுலோசனாவா?......

கணபதி: அப்படி ஒரு ஸ்டாரே இல்லையே......? ஏதாவது எக்ஸ்ட்ராவா வந்திருக்கலாம்.

பொன்: பாதகமில்லே, சுமாரா இருக்கா. ஆள் கருப்பா செகப்பாங்கிறது தெரியலையே.

ஜம்பு: கலர் போட்டோவா இருந்தாத் தெரியும். புடிச்சிருந்தா நேரிலேயே பார்த்துடலாமே?

கணபதி: சிகப்பைவிட கருப்புதான் அழகு. மன்மதன் கருப்புத்தானே. மகாவிஷ்ணு, கிருஷ்ணன், ராமர் இவர்களெல்லாம் கருப்போ இல்லையோ..?

(முனியாண்டி பொடி உறிஞ்சியபடி வருகிறான்)

முனி: மகமாயி!...... நமஸ்காரம் வருதுங்க.

பொன்: ஓ, பூசாரியா! வாய்யா, வா, முனியாண்டி, இங்கே பார்; இந்தப் பெண் புடிச்சிருக்கா பார்.

முனி: யாருக்கு?

பொன்: அட நமக்குத்தானையா பார்.

முனி: பொண்ணா இது?

பொன்: ஏன்?

முனி: (ஐயரையும் போட்டோவையும் பார்த்து) ஒஹோ நம்ம கணபதி ஐயர் சாமி பொம்பளே வேஷம் போட்ருக்காபோலிருக்கு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/20&oldid=1024405" இலிருந்து மீள்விக்கப்பட்டது