பக்கம்:அந்தமான் கைதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


பொன்: ஆமாம், கொஞ்சம் ஸ்டௌட்டாத்தான் இருக்கு.

ஜம்பு: உங்களுக்கு ஏன் இவ்வளவு கவலை? வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதைப்போல இருக்கிறதே! கையிலேயே தங்க விக்ரகம் போன்ற பெண்ணை வைத்துக்கொண்டு ஏன் இவ்வளவு தூரம் யோசிக்கவேண்டும்?

பொன்: கையிலேயே பெண் இருக்கிறதா?......... உம், அது யாரு?

ஜம்பு: உங்கள் தங்கை மகள் லீலாவைத்தான் சொல்லுகிறேன். லீலாவுக்கு மேல் அழகான பெண் இந்த உலகத்திலேயே கிடைக்காதே.

பொன்: யார் நடராஜன் தங்கையையா சொல்லுகிறாய்? சேச்சே! குடிக்கக் கூழுக்கும் வழியில்லாத அந்தப் பொறுக்கி நாய் வீட்டிலா நான் சம்மந்தம் செய்வது? ஊஹூம். அந்த அயோக்கியக் கழுதையின் உறவே வேண்டாமென்று தள்ளி வருஷம் இரண்டுக்கு மேலாகிறதே. இனிமேல் இறந்தாலும் அவன் முகத்தில் விழிக்கலாமா? (பல்லைக் கடித்துக்கொண்டு) என்ன மமதை அவனுக்கு, கிழட்டுப் பிணமாம். நான் கிழட்டுப் பிணம்? அவன் என்னைப் பார்த்துக் கிழட்டுப் பிணமென்று சொல்வது? இருக்கட்டும்.

முனி: என்ன உங்களைப் பார்த்தா அவன் கிழவனென்று சொன்னான்? முட்டாள், அப்போது நான் இல்லாமற் போய்விட்டேனே! உம்......அவன் ஏன் ஏஜமான், உங்களைப் பார்த்துக் கிழட்டுப் பிணம்னு சொன்னான்?

பொன்: ஒன்றுமில்லை; முன்பு இங்கே பூச்செடிகளுக்குத் தண்ணீர் எடுத்து ஊற்றிக்கொண்டிருந்தாள் ஒரு குட்டி; சின்ன வயது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/21&oldid=1024407" இலிருந்து மீள்விக்கப்பட்டது