பக்கம்:அந்தமான் கைதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22


முனி : சபாஷ் அதுதான் சரி. எஜமான் புடிதான் உடுப்புப் புடியாச்சே 'ம்' அப்புறம்?

பொன் : அப்புறம் என்ன? அதே சமயத்திலே அந்தத் தோட்டத்து ரோட்டுப் பக்கமாக அந்த அயோக்கியப் பயல் போய்க் கொண்டிருந்திருக்கிறான்.

ஜம்பு : யாரு அந்தக் குட்டியினுடைய புருஷனா?

பொன் : அட இல்லையப்பா! நீ ஒரு பக்கம் அவசரப்படுகிறாயே!

முனி : கணக்குப் பிள்ளை ஐயாவுக்கு வயிறு பசி வந்துட்டாப் போலேருக்கு.

பொன் : அந்தப் பக்கமாக இந்த நடராஜன் போயிருக்கிறான். தெருவோடு போகிறவன் இவன் பாட்டுக்குத்தானே போகவேண்டும்?

முனி : ஆமாம், போகாமல் என்ன செய்தான்?

பொன் : ஊஹூம், அந்தப் பரதேசிப் பயல் என்னை என்ன செய்ய முடியும்? புலிமாதிரி ஒரே தாவாகத் தாவி சுவரைத் தாண்டித் தோட்டத்துக்குள்ளே வந்தான். என்னைப் பார்த்தானோ இல்லையோ, அப்படியே அசந்து நின்றுவிட்டான். என்மேல் விரலைப் போட முடியுமா என்ன?

முனி : நல்லாருக்கு, உங்க பார்வைதான் ராஜ பார்வையாச்சே முடியுமா? இது என்ன விளையாட்டா இருக்கிறது? எனக்குத் தெரியாதா என்ன தங்கள் பராக்கிரமம்?

பொன் : என்னைக் கண்ட உடனே கையை நீட்ட முடியவில்லையா? கையாலே ஆகாத கழுதை என்ன செய்தான் தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/23&oldid=1024909" இலிருந்து மீள்விக்கப்பட்டது