பக்கம்:அந்தமான் கைதி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

 முனி : என்ன செய்தான்?

பொன் : என்ன செய்யிறது? என்னமோ எனக்கு முன்னே பிறந்தவன் மாதிரி நியாயமும் நீதியும் பேச ஆரம்பித்து விட்டான் பேச்சோடு பேச்சாக “பாவி, சண்டாளா, காமப் பிசாசே, கிளட்டுப் பிணமே” என்று என்னென்னவோ பேசிவிட்டான். வேலைக்காரப் பயல்களைக் கூப்பிட்டு அவனைக் கட்டிவைத்து உரித்துவிடலாமென்று நினைத்தேன். ஆனால் அதற்குள்ளே அந்தக் குட்டியையும் கூட்டிக்கொண்டு ஓடிப்போய் விட்டான். அயோக்கியப்பயல்.

முனி : சரிதான் அவங்களுக்குள்ளே அதுக்கு முன்னே தொடர்பு இருந்துருக்கும் போலிருக்கு.

ஜம்பு : அவனைச் சும்மாவா விட்டீர்கள்? மடப்பயல்! அந்தக் காலமெல்லாம் மலையேறிப்போய் விட்டது. அப்பொழுது கொஞ்சம் பசை இருந்தது. அதுதான் அப்படி பேசி இருக்கிருன். இப்பொழுது ஏக வரஷை. வீட்டைக்கூட நம் ராமசாமி சேர்வையிடம்தான் ஈடு வைத்திருக்கிருன். இனிமேல் உங்கள் தயவை நாடித்தான் ஆக வேண்டும்.

முனி : யாரு நம்ம குண்டோதரன் சேர்வை கிட்டையா? அப்ப இனிமே ஒங்க தயவே நாடித்தான் ஆகணும்.

பொன் : யார்? அவனா! பிச்சையெடுத்தால் கூட அவன் விரைப்பு அவனே விட்டுப் போகாது. அது கிடக்கப்பா விடு; அவள் என்ன பெரிய ரதியோ? அவளை விட்டால் உலகத்திலே வேறு பெண்ணே கிடைக்காதா என்ன! காசை விட்டெறிந்தால் எத்தனையோ கழுதை.

முனி : கழுதை மட்டுமென்ன, குதிரை, ஆடு, மாடு, காய், பன்னியெல்லாங் கிடைக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/24&oldid=1024964" இலிருந்து மீள்விக்கப்பட்டது