பக்கம்:அந்தமான் கைதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

சொல். (மறுபடியும் இரண்டு கோட்டுகளைக் கொடுத்து) இந்தா இதையும் வைத்துக்கொள். எதற்கும் உன் கையில் பணம் இருப்பது நல்ல தல்லவா?

முனி : ஆமாம், ஆமாம். ரொம்ப அவசியம்! கணக்கப் பிள்ளை ஐயா கிட்டேப் பணம் இருக்க வேண்டியது ரொம்ப அவசியம்.

பொன் : சரி, நான் வரட்டுமா, நான் சொன்னதெல்லாம்...

ஜம்பு : ஆஹா அதைவிட எனக்கென்ன வேலை?

முனி : அப்போ! நானும் போயிட்டு வரட்டுங்களா?

பொன் : சரி. போயிட்டு வா.

முனி : சில்லரை யேதாவது......

(ஒரு நோட்டைக் கொடுக்கிறார்)

முனி : (வாங்கிக்கொண்டு) மகமாயி...... நான் வருகிறேன்.

பொன் : ம்-ம், போயிட்டு வா...ம். ஜம்பு! நான் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கட்டும்.

ஜம்பு : அதுக்கு நானாச்சிங்க.

(பொன் போகிறார்)

ஜம்பு தனிமொழி : லீலா! நீ பாலசுந்தரத்துடன் நடத்தும் காதல் நாடகம் எத்தனை நாளைக்கென்று பார்ப்போம். அவனுடன் சேர்ந்துகொண்டு பள்ளியில் பலர் முன் என்னை அவமதித்தாயல்லவா? இருக்கட்டும்! எப்படியும், என்றைக்காவது ஒரு நாளைக்கு இந்தக் கைகள் உன்னைத் தழுவாமலா போகும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/28&oldid=1025006" இலிருந்து மீள்விக்கப்பட்டது