பக்கம்:அந்தமான் கைதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காட்சி 4


இடம்: பூந்தோட்டம்

காலம்: மாலை

பாத்திரங்கள்: லீலா, பாலு, நடராஜன்.

[லீலா ஒரு கல்லின் மீது அமர்ந்து பாடிக் கொண்டிருக்கிறாள்]
(பாட்டு)

இன்பம் இன்பம் எழில்மிகும் அதிசய
மலர் வனமே! (இ)

இன்னிசைக் குயில்கள் இதயம் மகிழ
எங்கும் கூவுதே! (இ)

தென்றலினுல் தேகமும் சிலிர்த்திடுதே!
சிந்தை குளிர்ந்திடுதே!
செல்வ மணாளனை காணேன்!
(இ)

மாலையும் போகுதே! காலம் வீணாகுதே!
காதலன் வரவைக் காணேன்! (இ)

[பாலு பின்புறமாக வந்து லீலாவின் கண்ணைப் பொத்துகிறாப். திடுக்கிட்டுத் திரும்புகிறாள்]

பாலு : லீலா! லீலா! இதோ பார், என்னுடன் பேச மாட்டாய்? (முகத்தைத் திருப்பிப் பார்த்து) ஹா! இதென்ன கண்ணீர்? ஏன் அழுகிறாய் ? இங்கே பார். என்னைப் பார்க்க மாட்டாயா? ஓஹோ ! உன்னிடம் நான் சொன்னபடி நேற்று வரவில்லையென்ற கோபம்தானே? எனக்குத் தெரியும்! இப்படியெல்லாம் ஆகுமென்று சொன்னால் கேட்கிறார்களா? சுத்த மடையர்கள், பிரன்ஸ்களாம் பிரன்ஸ். நான் என்னென்னவோ சாக்குப் போக்குகள்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/29&oldid=1025010" இலிருந்து மீள்விக்கப்பட்டது