பக்கம்:அந்தமான் கைதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

சொன்னேன்; கேட்கிறார்களா? விடாப் பிடியாகச் சினிமாவுக்கு இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள். நான்கு பேர் பிடிவாதம் செய்யும்போது எப்படி மறுக்க முடியும்?

லீலா : இன்றைக்கு மட்டும் ஏன் வந்தீர்கள்? யாரும் சினிமா ட்ராமாவுக்குக் கூப்பிடவில்லை போலிருக்கிறது?

பாலு : (சிரித்துக் கொண்டே) எனக்கு அதுதான் வேலை? லீலா, ஏதோ ஒரு நாளும் கூப்பிடாதவர்கள் கூப்பிடுகிறார்களே என்று போய்விட்டேன். இதற்காக இப்படிக் கோபிக்கலாமா?

லீலா : ஒருவரிடம் வருவதாக வாக்குக் கொடுத்தால் தலை போகிற காரியம் வந்து தடுத்தாலும் வந்துதான் தீர வேண்டும். அப்படிச் செய்யாதவர்களை எனக்குப் பிடிப்பதே இல்லை. இது நம்மவர்களிடம் உள்ள ஒரு பெரிய கெட்ட பழக்கம்.

பாலு : வாஸ்தவந்தான்; இந்தியர்களுக்குப் "பன்ச்சு வாலிட்டி'யே இல்லை யென்று எல்லோரும் தான் சொல்லுகிறார்கள். ஆனால், நான் உன் விஷயத்தில் மட்டும் இனிமேல் நீ சொன்ன சொல்லைத் தவறவே மாட்டேன். போதுமா? இதற்காகச் சிறு குழந்தையைப் போல் அழலாமா?...... உம்...... பேச்சு மட்டும் ஒரு கூடைப் பேச்சுப் பேசுகிறாயே! (ஒரு மலரைக் கிள்ளி அவன் மீது வீசுகிறான்)

லீலா : (புன் முறுவலோடு) ஆமாம், கொஞ்ச வந்து விட்டீர்கள். நான்படும் கஷ்டம் உங்களுக்கென்ன தெரி கிறது? இதோ பாருங்கள்! இனிமேல் இப்படி யெல்லாம் செய்தால் என்னை நீங்கள் பார்க்கவே முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/30&oldid=1026258" இலிருந்து மீள்விக்கப்பட்டது