பக்கம்:அந்தமான் கைதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36



பாலு : மலர் மேவும் வண்டாவேன்!

லீலா :
உள்ளமெலாம் இன்பமெனும்
தெள்ளமுதத் தேன் பாய!

பாலு :
கள்ளமிலாக் காதல்
உனை நான் மறவேனே!

லீலா : உயிர் நீர் உடல் நானே!

பாலு : உயிர் மாமட மானே!

இருவரும் :
நிலவும் கலையும் போல்
மலரும் மணமும் போல்
உலகினில் வாழ்வோமே......

லீலா : (நகர சபை மணி 7 அடிக்கும் சப்தம் கேட்டுத் திடுக்கிட்டு) அடடே மணி ஏழாகிவிட்டதே சரி, அம்மா தேடுவார்கள். அண்ணாவும் இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பார்; நான்...... போய்வரட்டுமா?

பாலு : லீலா அதற்குள்ளாகவா? இன்னும் சற்று நேரம்...

லீலா  : இல்லை, இல்லை. அதிக நேரம் ஆகிவிட்டது. நாளை மாலை சந்திக்கலாம். நான் வரட்டுமா?

பாலு : நாளை மாலை 5½ மணிக்கு. மறந்துவிட மாட்டாயே?

லீலா : மறக்கமாட்டேன், நான் வருகிறேன்.

(லீலா புன்முறுவலோடு மறைகிறாள். அவள் சென்ற திக்கை நோக்கிக் கொண்டிருந்து விட்டு சிறிது நேரத்தில் பாலுவும் செல்லுகிறான், மறைந்திருந்த நடராஜன் வெளியே வந்து அவர்கள் இருவரையும் பார்த்துப் பெருமூச்சுடன் புன்முறுவல் பூக்கிறான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/37&oldid=1028549" இலிருந்து மீள்விக்கப்பட்டது