பக்கம்:அந்தமான் கைதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காட்சி 5.

இடம்: நடராஜன் வீடு

காலம்: காலை

பாத்திரங்கள் :

லீலா-காமாட்சி-நடராஜன்-திவான்பகதூர்.

[லீலா பின்னல் வேலை செய்துகொண்டே ஒரு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருக்கிறாள். காமாட்சி வருகிறாள்.]

காமா : ஏண்டி ஒங்க அண்ணென் வச்ச வரிசைக்கு, உனக்குப் பாட்டுவேறையா வருது, பாட்டு. முகரையைப் பாரு சீ! கழுதை! போய் வேலையைப் பாருடி. அவன்தான் கெட்டுத் தொலைஞ்சுப் போனன்னு இருந்தா நீ வேறையா பாட்டையும் கதையையும் படிக்க ஆரம்பிச்சுட்டே, ரொம்ப நல்லாருக்கு! இது என்ன தேவடியா வீடா? ஒரு வயசுப் பொண்ணு லெக்ஷணமாப் பசுமாதிரி அடுத்த வீட்டுக்குத் தெரியாமே இருப்பியா, கொஞ்சங்கூட அடக்கமில்லாமே இப்படி பொழுதனைக்குங் கூத்தடிக்கிறீயே இது ஒனக்குத் தேவலாமா? இல்லே ஒனக்குத் தேவலமான்னு கேட்கிறேன்

லீலா : இதென்னம்மா நீ பேசுறது வேடிக்கையாய் இருக்கு. சங்கீதம் பழகிக் கொள்வதால் எங்காவது கெட்டுப் போவார்களா? பெரிய மனிதர்கள் வீட்டிலெல்லாம் ஆயிரம் ரெண்டாயிரமென்று செலவழித்துப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறார்களே; அவர்களெல்லாம் தங்கள் குழந்தையைக் கெடுத்துவிடுவதற்கா அப்படிச் செய்கிறார்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/38&oldid=1028576" இலிருந்து மீள்விக்கப்பட்டது