பக்கம்:அந்தமான் கைதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


காமா : அது என்னமோ, இந்த சினிமாவையும் ட்ராமாவையும் பார்த்துட்டு எடுத்ததுக்கெல்லாம் எதுத்து எதுத்துப் பேசுற இந்தக் காலத்துக் குட்டிகளோட பேச யாராலே முடியும்.

(வாசலில் ஹாரன் சப்தம் கேட்க இருவரும் திரும்பிப் பார்க்கிறார்கள். பொன்னம்பலம் பிள்ளை கனைத்துக்கொண்டே ஆடம்பரத்துடன் வருகிறார். ட்ரைவர் பழக்கூடைகளையும் மற்றும் பல தின்பண்டங்களையும் கொண்டு வந்து வைக்கிறான். காமாட்சி பரபரப்போடும் மலர்ந்த முகத்தோடும் பேச ஆரம்பிக்கிறாள்)

காமா : வாங்கண்ணா வாங்க வாங்க, இப்படி உட்காருங்கள்.

பொன் : என்ன காமு எல்லோரும் செளக்கியந்தானே?

காமா : என்னமோ ஒங்க புண்ணியத்திலே இருக்கிறோம். செத்தோமா பொளேச்சோமான்னு பாக்க இப்பவாவது ஒங்களுக்கு மனசு வந்திச்சே,

பொன் : அடடே! அப்படி யெல்லாம் ஒன்றுமில்லை...... அன்றைக்கு அவன் பேசியதை நினைத்தால் (நீண்ட பெருமூச்சு விட்டு) ஊம் - என்னமோ. பேசிவிட்டுப் போகிறான், சிறுபிள்ளைத்தனம்; அதுகூடப் பிரமாதம் இல்லை. அடிக்கடி உங்களே வந்து பார்க்க வேணும் என்ற ஆசைதான். எனக்கு எங்கே ஒழிகிறது. ஊரில் ஒரு பெரியமனிதன் என்று இருந்தால், அப்பாடா எவ்வளவு தொந்திரவு தெரியுமா? அங்கே டீ பார்ட்டி, இங்கே மீட்டிங், அங்கே அது இங்கே இது என்று ஏதாவது வேலை வந்துவிடுகிறது. ஊருக்கு ஒரு கலக்டரோ கவர்னரோ வந்தால் முதலில் நாம் இருக்கவேண்டியதாய் இருக்கிறது. பெரிய மனிதர் வீடுகளில் ஏதாவது விசேஷமென்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/39&oldid=1028575" இலிருந்து மீள்விக்கப்பட்டது