பக்கம்:அந்தமான் கைதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


காமா : இருந்தாலும் நீங்களும் இப்படிக் கவனிக்காம இருக்கப்படாது. கெட்டுப்போயிட்டோம். இன்னமே நம்ம தனியா இந்தப் பட்டணக்கரையிலே இருக்க வேண்டாம். நீங்க இருக்கிங்கோ, ஆயிரமா இருந்தாலும் கூடப் பொறந்த பொறப்பு; நம்மளெ விட்டுடமாட்டிங்க இன்னு நினைச்சுதானே அறுத்த கழுத்துத் தழும்புகூட மாறாமே இந்த சின்னஞ் சிறுசுகளையும் கையிலே புடிச்சிக்கிட்டு வந்தேன். (மறுபடியும் கண்ணைக் கசக்கிக்கொள்ளுகிறாள்)....ஊம் ஒங்களெச் சொல்லி என்ன? எல்லாம் என் தலைவிதி.

பொன் : என்னை நம்பி வந்ததற்கு இப்பொழுது என்ன மோசம் வந்துவிட்டது? உன் மகன் ஒழுங்காய் நடந்து கொண்டிருந்தால் எல்லாம்தான் நடந்திருக்கும்.

காமா : அவன் என்னண்ணா! நேற்றுப் பிறந்த சிறுபிள்ளை தானே? அவன் ஒரு எதிரின்னு சொல்லிட்டு நீங்க எங்களெ இப்படி அடியோட மறக்கலாமா?

பொன் : ஏன் அவன் எங்கேயாவது ஒரு வேலையைப் பார்த்து இருந்தால் என்ன?

காமா : அவனுந்தான் எங்கெங்கேயோ அலைஞ்சுபாத்தான்; வேலை ஒன்னும் கிடைக்கல்லே.

பொன் : சரி, இனிமேல் ஒன்றுக்கும் கவலைப்படவேண்டாம். உங்களை இன்றைக்கு இந்த நிலையிலே பார்க்க எனக்கு அதிக வருத்தமாயிருக்கிறது. கூடப்பிறந்த பாசம் விடுகிறதா? இதோ பார் காமு! இனிமேல் உங்களுக்கு வேண்டிய செளகர்யமெல்லாம் நானே செய்கிறேன். இந்த வீடு ஈடு இருப்பதாகக் கூட யாரோ சொன்னதாக ஞாபகம். அந்தக் கடனையெல்லாம் கூட நானே கட்டிவிடுகிறேன். வேண்டுமானால் உங்களுக்காக ஒரு பத்தாயிரம் ரூபாய் பேங்கிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/41&oldid=1028568" இலிருந்து மீள்விக்கப்பட்டது