பக்கம்:அந்தமான் கைதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


போட்டு வைக்கிறேன். அந்தக் கீழக்குறிச்சியில் உள்ள நிலமெல்லாம் உன் பேருக்கே சாசனமாக எழுதிவைத்து விடுகிறேன்; போதுமா?

காமா : (அளவற்ற மகிழ்ச்சியோடு) என்ன! நிஜமாகவா? நிஜமாகவா? இவ்வளவும் எங்களுக்கு.........

பொன் : பின்பு என்ன, விளையாட்டுக்குச் சொல்வதாகவா நினைக்கிறாய்? உண்மையாகவேதான். எனக்கு வேறு யாரிருக்கிறார்கள்? எனக்குப் பிறகு என் சொத்தை யெல்லாம் லீலாவும் அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளும் தானே அனுபவிக்க வேண்டும்!......

(அசட்டுச் சிரிப்பு)

காமா : அப்படியானால் நீங்க சொல்றதுக்கு....அர்த்தம்....?

பொன் : அர்த்தமென்ன அர்த்தம், லீலாவை நான்தான் கலியாணம் செய்துகொள்ளப் போகிறேன். ஏன்? என்ன யோசனை செய்கிறாய்? நாலாந் தாரமாச்சே யென்றா? இல்லை வயதாகிவிட்டதா? உன்னைவிட இரண்டு மூன்று வருஷத்துக்கு மூத்தவன்தானே? அதிலும் இப்போது உன்னைப் பார்த்தால் அக்கா என்றும், என்னைப் பார்த்தால் தம்பி என்றும்தானே சொல்லுவார்கள்?

காமா : அதுக்கு இல்லை அண்ணா! இதுக்கு நடராஜனும் லீலாவும் சம்மதிக்கனுமேன்னு தான்.

பொன் : அவர்கள் சம்மதத்தை என்ன காமு கேட்பது?... திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளைக்குப் பெண் கொடுக்கவா யோசனை? நான் நினைத்தால் எத்தனையோ பேர் பெண் கொடுக்க நான் நீ யென்று ஓடி வருவார்கள். இருந்தாலும் உன்னைவிட அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/42&oldid=1028590" இலிருந்து மீள்விக்கப்பட்டது