பக்கம்:அந்தமான் கைதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42


ளெல்லாம் எனக்குப் பெரிதா? என்னமோ தங்கை மகளாச்சே, சொந்தம் விட்டுப் போகக் கூடாதே; இந்தச் சொத்தெல்லாம் அனியாயமாகப் பிறத்தியானுக்குப் போய்விடக் கூடாதே என்று தான் பார்க்கிறேன்.

(நடராஜன் வருகிறான். பார்த்தும் பாராதவன்போல், போய்ச் சட்டையைக் கழற்றி மாட்டிக் கொண்டிருக்கிறான்.)

காமா: ஏண்டா தம்பி. இங்கே வந்திருக்கிறது யாருன்னு பாத்தியா?

நடராஜன் : யாரது?

காமா : மாமா வந்திருக்காருடா! இங்கே வந்து பாரு!

நட : யார்? மாமாவா வாங்க வாங்க. ஏது இந்த ஏழைகள் மேலே இவ்வளவு தயவு வந்தது!

பொன் : அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நீங்கள் தான் என்னமோ நினைத்துக் கொண்டு ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள். நான் வீட்டை விட்டு ஒரு நாளைக்கு வெளியே புறப்பட வேண்டுமானால் சாமான்யமாக இருக்கிறதா, என்ன?

காமா : அதெல்லாமிருக்கட்டும். இப்போது மாமா எதுக்காக வந்திருக்கார் தெரியுமோ!

நட : தெரியாமலென்ன? உன்னைப் பார்க்க வந்திருப்பார்.

காமா : உனக்கு ஒரு வேலை பார்த்துத் தர்ராறாம்.

நட : அதுதான் சொன்னேன். இப்போதுதான் தயவு பிறந்திருக்கிறதென்று.

காமா : அதோடு மட்டுமா, நம்ம வீட்டுக் கடனை யெல்லாம் தீர்த்துடறேன்னுட்டாரு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/43&oldid=1028791" இலிருந்து மீள்விக்கப்பட்டது