பக்கம்:அந்தமான் கைதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


பொன் : டேய்! நீ யாரிடம் பேசுகிறாய் என்பது தெரிகிறதா?

நட : ஆஹா நன்றாகத் தெரிகிறது. மண்டை வறண்ட ஒரு மடையனிடம் பேசுறேனென்று.

பொன் : யார் நானா? என்னையா மடையனென்றாய்?

நட : இல்லை! மகா புத்திசாலிதான். இல்லாவிட்டால் கட்டையிலே போகிற காலத்திலே. கன்னியர்கள் மேலே காதலும், கலியாண நினைப்பும் வருமா?

பொன் : என்ன என்னையா கிழவனென்று சொல்லுகிறாய்?

நட : ஊஹூம்! யார் அப்படிச் சொன்னது? குழந்தையல்லவா! பல்கூட இனிமேல்தான் முளைக்க வேண்டும்; கல்யாண மாப்பிள்ளை முகரையைப் பாருங்களேன்!

பொன் : உன் குணம் உன்னைவிட்டுப் போகுமா?

நட : அது எப்படிப் போகும்?

பொன் : அடே நான் நன்மைக்குத்தான் சொல்லுகிறேன்; அது.....

நட : எது நல்லது எது கெட்டதென்று எனக்குத் தெரியும். உன் பணத்தைக் கண்டு பல்லைக் காட்டுபவன் நானல்ல. நீ லக்ஷாதிபதியாய் இருக்கலாம். ஆனால் உன் பிச்சைக்காரக் காசுக்காக என் தங்கையை நான் விற்றுவிடத் தயாராயில்லை. இந்த உயிர் இந்த உடலை விட்டு நீங்கும்வரை நீ நினைப்பதொன்றும் நடக்காது.

காமா : அடே! ஏண்டா உனக்கு இந்தத் துர்ப்புத்தி? இந்த நிலைமையிலே நம்மளே வேறே யாருடா வச்சுத் தாங்கப் போறா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/46&oldid=1029032" இலிருந்து மீள்விக்கப்பட்டது