பக்கம்:அந்தமான் கைதி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

பஞ்சகாலத்திலே இரண்டாயிரம் மூவாயிரம் போகிறதென்றால் சாமானியமா என்ன?

சேர்வை : ஆமாங்க! அதுக்கு என்னங்க பண்றது?

முனி : ஐயா சொல்றபடி கேட்டா ஒனக்குப் பணத்துக்குப் பணமும் வரும் ஐயா தயவும் கிடைக்கும். அவுங்கக் குடும்பத்துக்கு உபகாரம் செய்த புண்ணியமும் கிடைக்கும்.

சேர்வை : நெஜமாவா? அப்புடீன்னா அதையேங்க நான் வேண்டாங்குறேன்? எப்படியாச்சும் அவங்களும் நல்லா இருக்கணும். எனக்கும் பணம் கெடைக்கனும.

முனி : அப்படீன்னா நான் சொல்றபடி செய்தா அது சீக்கிரம் முடியும்.

சேர்வை : என்ன செய்யச் சொல்றீங்க?

முனி : நீ உடனே கோர்ட்டுலே தாவாப் போட்டு எவ்வளவு சீக்கிரம் அந்த வீட்டை ஏலத்துக்குக் கொண்டு. வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொண்டார வேணும்.

சேர்வை : ஐயோ பாவம். அவங்க பணத்துக்கு எங்கேங்க போவாங்க?

பொன் : அட அந்தக் கவலை உனக்கெதற்கையா? பணம் கொடுக்கத்தான் நான் இருக்கிறேனே.

சேர்வை : அப்புடீன்னா இப்பவே குடுத்துடுங்களேன். நான் வேணுமின்னாலும் எதாச்சுங் தள்ளிக் குடுக்கிறேன். எதுக்குங்க வீணா வக்கீலுக்குங் கோர்ட்டுக்கும் செலவழிக்கணும்.

முனி : அட அவுங்க அதுக்குத்தான் ஐயா இருக்காங்க..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/51&oldid=1073439" இலிருந்து மீள்விக்கப்பட்டது