பக்கம்:அந்தமான் கைதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

 முனி : ...இருபது காசுதான் இருக்கா...சரி அதையாவது குடு (சேர்வை தனியாகப் போய் முடிச்சை அவிழ்க்கிறான்.)

முனி : (தனக்குள்) ஏன், அதைத்தான் விடணும். நாலு சிகரெட்டுக்கு ஆச்சு.

சேர்வை : (பணத்தைக் கொடுத்துவிட்டு) நான் வர்ரேங்க.

முனி : (காசைச் சுண்டி இடையில் சொருகிக்கொண்டே). ஆகா! மகமாயி...

(இருவரும் போகிறார்கள்)


காட்சி 8.


இடம் : நடராஜன் வீடு

காலம் : காலை

(நடராஜனும் லீலாவும் இரண்டு நாற்காலிகளில் அமர்ந்துள்ளனர். நடராஜன் பாரதி பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கின்றான், போஸ்டு பியூன் வருகிறான்.)

போஸ்ட் : போஸ்ட்!

நட : என்ன?

போஸ்ட் : உங்களுக்கு ஒரு ரிஜிஸ்டர் இருக்கிறது.

நட : ரிஜஸ்ட்டரா? (லீலா உள்ளே போகிறாள். கையெழுத்தைப் போட்டு ரிஜிஸ்ட்டரை வாங்கிப் படிக்கிறான், போஸ்ட்மேன் போகிறான். காமாட்சி வருகிறாள்.)

காமா : என்னடாப்பா அது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/54&oldid=1073442" இலிருந்து மீள்விக்கப்பட்டது