பக்கம்:அந்தமான் கைதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

 முனி : நீங்க சொல்றதும் நல்ல யோசனைதான் (சற்று யோசித்து) சரி அதுக்கும் வழியிருக்கு. (காதண்டை ஏதோ சொல்லிவிட்டு) எல்லாம் நுழைந்து வேலை செய்யனும்.

பொன் : சபாஷ் முனியாண்டி.......ஆனால் இது நடக்க வேணுமே!

முனி : நீங்க பாருங்களேன். இந்த முனியாண்டி வேலையை அப்புறம் தெரியும்.

பொன் : சரி, எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது. நீ பிறகு........ முனி சரி...(இழுப்போடு தலையைச் சொரிந்து கொண்டே) சில்லரை ஏதாவது......

பொன் : இந்தா, இந்தப் பத்து ரூபாயை வைத்துக்கொள்; போதுமா?

முனி : போதுங்க, இன்னைக்கு மட்டுந்தானே. (போகிறான்)

(பிச்சைக்காரப் பையன் ஒருவன் பாடிக்கொண்டு வருகிறான்)

பிச்சை : ஐயா பசி காதை அடைக்கிறது. ஒரு காலணா இருந்தால் கொடுங்களேன். உங்களுக்குப் புண்ணியம்.

பொன் : சீ! அயோக்கிய ராஸ்கல். போடா வெளியே. எருமை மாதிரி இருக்கிறாயே. எங்கேயாவது போய் வேலை செய்தால்? சோம்பேறி நாயே!

பிச்சை : வேலை எங்கும் கிடைக்கலே. பசிக்கிறது; ஒங்களுக்குப் புண்ணியம்,

பொன் : அடப் பிச்சைக்கார நாயே! நான் போடாங்கிறேன் அவ்வளவு திமிரா (சவுக்கால் அடிக்கிறார். பையன் கீழே விழுகிறான்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/57&oldid=1029598" இலிருந்து மீள்விக்கப்பட்டது