பக்கம்:அந்தமான் கைதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காட்சி 10.

இடம் : நடராஜன் வீடு.

காலம் : பகல்

பாத்திரங்கள் : நடராஜன், காமாட்சி, முனியாண்டி.

[நடராஜன் காமாட்சி இருவரும் வெளித் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார்கள்; முனியாண்டி பேசிக் கோண்டே வருகிறான்.]

முனி : என்ன அநியாயம் என்ன அக்ரமம் உம், யாரையும் சொல்கிறத்துக்கில்லே, ஊரு அப்படிக் கெட்டுப் போச்சி. என்னமா வாழ்ந்த குடும்பம்! எத்தினி கப்பல் ஓடிச்சி எல்லாம் போராத காலம். அந்த அய்யா இருந்த காலத்திலே, இந்த சேர்வைக்கு எவ்வளவு உபகாரம் செய்திருப்பாரு; எவ்வளவு பணங் குடுத்திருப்பாரு. அதையெல்லாம் நெனச்சுப் பாக்காமே, அந்தப் படுபாவி திடீருன்னு இப்படி வீட்டே ஏலத்துக்குக் கொண்டாந்துட்டானே; அவன் உருப்புடுவானா?

காமா : அதை யெல்லாம் சொல்லி இப்ப என்ன பிரயோசனம்? விடிஞ்சா அமீனா போடு போடுன்னு வந்து வீட்டே ஏலம் போடப் போறான். ஏம்பா முனியாண்டி! இதுக்கு யோவது ஏதாவது ஒருவழி செய்யப்படாது? புள்ளேதான் எனக்கு அணிப் புள்ளையாப் பொறந்திருக்கு. இதுலே சொல்லப் போன...வீராப்பு வேறே; இந்தச் சமயத்திலே எங்க அண்ணனேப் பகைச்சுக்காமே இருந்தாலும் (முகத்தில் முந்தானையை வைத்து அழுகிறாள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/58&oldid=1029612" இலிருந்து மீள்விக்கப்பட்டது